மென்மையான எச்சரிக்கை!

ம் ஊரில் வயலன்டா வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகள் போல வெளிநாடுகளில் இல்லை பாஸ். செம டீஸன்ட்டா தான் அறிவிப்புப் பலகைகள் வெச்சிருப்பாங்க. இதோ சாம்பிளுக்குச் சில... 

எச்சில் துப்பாதீர் - ப்ளீஸ் டோன்ட் ஸ்பிட் ஹியர்

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் சமூக நலன் கருதி வெளிநாடுகளில் ஒரு பலகை அல்லது விளக்கப்படத்தில் `ப்ளீஸ் டோன்ட் ஸ்பிட் ஹியர்' என எழுதினால், நம் ஊர்களில் `எச்சில் துப்பாதீர்' எனக் `கேட்டுத் தொலைங்கடா' ரீதியில் எழுதியிருப்பார்கள். நம் ஆளுங்க அதில் `அப்படித்தாண்டா துப்புவேன்' என்று ரிப்ளை மெசேஜ் எழுதி வெச்சுடுவாங்க. #அகராதி புடிச்சப் பசங்க! 

திருடர்கள் ஜாக்கிரதை - மானிட்டரிங்

எல்லா ஊர்களிலுமே திருடர்கள் அட்ராசிட்டி இருக்கத்தான் செய்யும். அவர்களை வார்னிங் செய்யும் வகையில் வெளிநாட்டில் `மானிட்டரிங்' என்ற வாசகம் அட்டையில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும். `நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்' என்று அர்த்தம். இதே, நம்ம ஊரில், திருடர்களுக்கு வார்னிங் கொடுக்காமல், `திருடர்கள் ஜாக்கிரதை' என நமக்கு எச்சரிக்கை கொடுத்திருப்பார்கள். கொடுமை என்னன்னா... இப்படி எழுதப்பட்டிருக்கும் பலகைகளே திருடுபோகும். #கெட்டப்பசங்க சார்!

ஆஃப்டர் விஸ்கி டிரைவிங் ரிஸ்கி - ப்ளீஸ் டோன்ட் டிரிங்க் அண்ட் டிரைவ் யு ஹேவ் ஃபேமிலி!

தண்ணிப் போட்டு வண்டி ஓட்டினால் போலீஸ் மட்டுமில்லை, எமனும் நம்மைத் தூக்கிட்டுப் போயிடுவார். அதை மனசுல வெச்சுதான் இந்த வாசகம். ஃபாரீனில் `உனக்குக் குடும்பம் இருக்கிறது. அதை மனதில் நினைத்துக்கொண்டு வண்டியை ஓட்டு' என்று சென்டிமென்ட் போர்டைத் தொங்கவிட்டிருப்பார்கள். நம்ம ஊர்ல, `மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்' போர்டு ஆங்காங்கே தொங்கும். #ஆளுக்கு ஆள் குடிக்கிறதுனாலதான் அதுக்கு ஆல்கஹால்னு பேரு வந்திருக்குமோ?

படியில் பயணம்... நொடியில் மரணம்

தலைகீழா நின்னு தண்ணிக் குடிச்சாலும், இந்த மாதிரி வாசகங்களை எல்லாம் வெளிநாடுகளில் பார்க்கவே முடியாது. ஏன்னா, அங்கெல்லாம் எவ்வளவு பேர் பஸ்ஸில் பயணிக்க முடியுமோ, அவ்வளவு பேருக்குத்தான் டிக்கெட் கொடுப்பாங்க. தொங்கிட்டு வர்றது, கூரைமேல ஏறி ஆடிக்கிட்டு வர்ற வேலையே அங்கே கிடையாது. ஆனா, நம்ம ஊர்ல சொல்லவா வேணும்? இங்கே தொங்க ஆரம்பிச்சா, இங்கிலாந்து வரைக்கும்கூட தொங்கிக்கிட்டே போவாங்க. அவங்களுக்குத்தான், `படியில் பயணம்... நொடியில் மரணம்', `கரம் சிரம் புறம் நீட்டாதீர்' வசனத்தைக்கொடுத்து, திருத்தப்பார்க்குது நம்ம ஊர்!

காதல் கல்யாணத்துக்கு அணுகவும்

இப்போதுள்ள ட்ரெண்டில் கல்யாணம் பண்றதே கஷ்டமான காரியம். அதுவும் பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் லவ் பண்ணிக் கல்யாணம் பண்றதெல்லாம் சாதாரண காரியமே கிடையாது. அதைச் சரிக்கட்டத்தான் ஒரு குரூப் கிளம்பிருக்கு. காதல் கல்யாணம் பண்ண இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். லவ் மேரேஜ் கன்ஃபார்ம்னு சொல்றாங்க. இது நம்ம இந்தியாவே தான் பாஸ்! #சூப்பர்ல

 - தார்மிக் லீ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick