ஆயகலாய்கள் 64 | Jolly type of speech with friends - Timepass | டைம்பாஸ்

ஆயகலாய்கள் 64

*லாய்… எங்கு நோக்கினும் கலாய், எதைப் பார்ப்பினும் கலாய்னு ஆயகலைகள் 64-ல் இதையும் சேர்த்துட்டா என்னன்னு தீர்மானம் கொண்டு வர்ற அளவுக்கு, கலாய்த்தல் ஒரு கலையாவே மாறிட்டு வருது. அந்த கலாய் லிஸ்ட்ல எது எல்லாம் வருதுன்னு கலாய்ப்போமா?

* உளறிக்கொட்டுற அரசியல்வாதிகள்கள்தான் இப்போ இருக்கிற ட்ரெண்டிங் ட்ராக்டர்ஸ். ‘இந்தா இதென்ன ஒயர் கையில மாட்டுது?’ங்கிறதுல இருந்து, சாவு கூட்டத்துல செல்ஃபி எடுக்கிறது வரை இவங்க அப்பாவித்தனமா பண்ற பிக்காளித்தனத்தை எல்லாம் வெச்சு ஒரு மினி மீம் புக்கே போடலாம்.

* ஃபர்ஸ்ட் டார்கெட் அரசியல்வாதிகள்னா அடுத்த ஆர்டர் சினி ஸ்டார்ஸ்தானே? அதானே சார் நியாயம்! பட அறிவிப்பு வந்த முதல் நாளில் இருந்து ரிலீஸ் அப்போ ஒட்டின போஸ்டர் கிழியறவரை ஓட்டித் தள்ளிடுவாங்க. காரணம் என்னன்னு கேட்கிறீங்களா? அதெல்லாம் சொல்ல முடியாதுங்க. வார் டன்னா அடிப்போம்... அவ்வளவுதான். ஆங்.

* அடுத்த அல்ட்டி அலப்பறை களுக்கு தகுதியானவங்களா நாம தேர்ந்தெடுக்கிறது நமக்குப் பாடம் நடத்துகிற வாத்தியார்ஸ்தான். க்ளாஸ்ல வராத தூக்கத்தை `வா வா'ங்கற அளவுக்கு வெச்சு செய்றது, சப்ஜெக்ட்டை சரியா அவங்களும் புரிஞ்சுக்காம, நமக்கும் புரியவிடாம குழப்பி குருமா வைக்கிறது, இன்டர்னல் மார்க்ஸ்ல கை வைக்கிறது, பேப்பர் கரெக்‌ஷன்ஸ்ல கும்மி அடிக்கிறதுனு இவங்க பண்ற மன்னிக்க முடியாத பாவங்களுக்கு, கலாய்ச்சா என்ன தப்புங்கிறேன்?

* தனியா போற பொண்ணுங்களைப் பசங்க கலாய்க்கிறதும், பதிலுக்கு சான்ஸ் கிடைக்கும்போது பொண்ணுங்க பசங்களை வாரிவிடுறதும் சகஜம்தானே நாராயணா! ஏன்னா, இது வாலிப வயசு.

* அடுத்து ஆபீஸ்னு ஒரு திவ்யமான இடம் இருக்கு. ஆபீஸ் பியூன்ல இருந்து பாஸ் வரை அத்தனை புனித ஆத்மாக்களும் நாம கலாய்க்கிறதுக்குனு எடுத்த அவதராம் மாதிரி செலக்ட்டிவ்வா இருப்பாங்க. அப்புறம் ஆபீஸ்ல வேலையா பார்க்க முடியும். சதா நம்மளைக் கடுப்பேத்துற இவங்களை உட்கார்ந்து கலாய்க்கதான் முடியும்.

* அப்புறம் இந்த ஆண்டிப்பட்டியில் இருந்துக்கிட்டு `ஆமா, ஆமா அமெரிக்காவுலதான் இருக்கேன்'கிற ரேஞ்சுக்கு சீன் போடுற ஒரு பெஸ்ட் காமெடி பக்கோடா நம்ம எல்லோருடைய பட்டி லிஸ்ட்லயும் இருப்பாங்க. ஆமா அதேதான். காமன் கலாய்ங்க.

* ஊரு உலகத்துல இருக்கிற எல்லோரையும் கலாய்க்கும்போது கூடவே இருக்கற உறவுக்காரங்களைக் கலாய்க்காம விட்டா அது தெய்வக் குத்தமாகி, சாமி கண்ணைக் குத்துறதுக்கான வாய்ப்புகள் அமோகம். வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவங்க பெத்த பிள்ளைங்களோட நம்மளை கம்பேர் பண்ணி கலவரத்தை ஏற்படுத்துறது, சொத்து பத்து விவரத்தைச் சொல்லி சுத்தல்ல விடுறதுனு இவங்க ஆடுற டபுள் கேமுக்கு தாரளாமா கலாய்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick