சிறப்பா செய்வோம்ல..!

பொண்ணுங்களோட ரொம்ப நெருங்கிய சொந்தம் அதாவது அண்ணன், தம்பி, தங்கச்சி கல்யாணம்னா அவங்களைக் கையில பிடிக்க முடியாது. அந்தப் புள்ளைகளோட அலட்டல்களையும், பாவப்பட்ட அப்பாவி ஆண்களின் மனநிலையைப் பற்றியும் லைட்டா அலசித் துவைச்சித் தொங்கப்போடுவோம்...

 முதல்லே புடவை எடுக்குற வைபவம்.நிச்சயத்துக்கு ஒண்ணு, மாப்பிள்ளை அழைப்புக்கு ஒண்ணு, நலங்குக்கு ஒண்ணு, நாள் வைக்குறதுக்கு ஒண்ணு, கல்யாணத் துக்கு ஒண்ணு, ரிசப்ஷனுக்கு ஒண்ணு... `யய்யாடி... கல்யாணம் உனக்கா உன் உடன்பிறப்புக்கா'னு பசங்க கேட்டாங்க... செத்தாங்க. `ஏம்மா, ஏற்கெனவே எடுத்த புடவையெல்லாம்...'னு லோ வாய்ஸ்ல பட்டும்படாமலும் கேட்டா, `அதெல்லாம் அவுட் ஆஃப் ஃபேஷன்ங்க!'னு ஒரு வார்த்தைல முடிச்சுடுறது. நல்லவேளை நம்மளை அவுட் ஆஃப் ஃபேஷன்னு சொல்லாம போறாளேனு மனசை தேத்திக்கோங்க பாய்ஸ்!

 இதுல ஹைலைட் என்னான்னா... `நான் என்ன பொழுதன்னைக்குமா டிரெஸ் எடுக்குறேன்? தீபாவளி, பொங்கல் அம்புட்டுதானே?'னு கேட்டுட்டுக் கண்ணைக் கசக்குற டயலாக். `அப்போ அந்த அமேசான், ஃப்ளிப்கார்ட் காட்டுக்குள்ளலாம் நுழைஞ்சு வாங்கற டிரெஸ்லாம் பேபிமா?'னு சொல்லக்கூடாது. சொன்னீங்க... பழி வாங்குறேன்ற பேர்ல இன்னும் ரெண்டு சேலைக்கு பில்லைப் போட்டுடுவாங்க. ஓடிடுங்க!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick