பேசிக் கொல்வாய்ங்களே..! | Repeated Dialogues in Tamil Cinema - Timepass | டைம்பாஸ்

பேசிக் கொல்வாய்ங்களே..!

மிழ் சினிமாவில் சில வசனங்களை ஏன் பேசுறாங்க, எதுக்கு பேசுறாங்கன்னு தெரியாமலேயே பேசிக்கிட்டு இருப்பாங்க. படம் எந்த ஜானரா இருந்தாலும் சரி, சில டைப் ஆஃப் வசனங்களை மட்டும் அடிக்கடி யூஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. இந்த மாதிரி வசனங்கள் மட்டும் எல்லா படத்துலேயும் எப்பவும் ரிப்பீட் மோட்லேயே இருக்கும். அந்த மாதிரி சில ரிப்பீடட் வசனத்துக்கு எல்லாம் ரிப் போடுற ஆர்டிக்கிள்தான் பாஸ் இது. பேசுவீர்களா... இனி பேசுவீர்களா?

ஆனந்தக் கண்ணீர் : என் பொண்ணோட கண்ணுல ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்னு கிட்டத்தட்ட தமிழ்ல வந்த முக்கால்வாசிப் படத்துல கண்டிப்பா சொல்லி இருப்பாங்க. இந்த டயலாக்தான் இதுவரைக்கும் அதிகமுறை யூஸ் பண்ணின சினிமா டயலாக்கா இருக்கும். பழைய சிவாஜி காலத்து படத்துல ஆரம்பிச்சு டி.ஆர் படம் வழியா ட்ராவல், ஆகி, இப்போ இருக்கிற ஜெனரேஷன் படங்கள் வரைக்கும் இந்த டயலாக் பரவி இருக்கு. அதெல்லாம் சரி பாஸ்... கண்ணுல வர தண்ணில, எது ஆனந்தக் கண்ணீர்? எது ஃபீலிங் சேட் கண்ணீர்? ப்ளீஸ் அழ வைக்காதீங்க ஃப்ரெண்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick