கொக்கிபீடியா - விஜய டி.ராஜேந்தர் | Kokkipedia - Vijaya T Rajendar - Timepass | டைம்பாஸ்

கொக்கிபீடியா - விஜய டி.ராஜேந்தர்

பெயர்     : விஜய டி.ராஜேந்தர்
பிறப்பு    : மே 9, 1955
வயது     : 61
இருப்பிடம்    : சென்னை

டி.ராஜேந்தர் என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகரும், இயக்குநரும், பாடகரும், இசையமைப்பாளரும், தயாரிப்பாளரும், ஒளிப்பதிவாளரும், பாடகரும், கலை இயக்குநரும், பாடலாசிரியரும் ஆவார். (ஸொப்பா...)இதுமட்டுமல்லாது லட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியின் நிறுவனரும் ஆவார்.

சாதனைகள் :

சகலகலா வல்லவரான டி.ஆர் அவர்கள் சகட்டுமேனிக்கு பல சாதனைகளை புரிந்துள்ளார். `உயிருள்ள வரை உஷா', `மைதிலி என்னை காதலி', `மோனிஷா என் மோனலிசா', `வீராசாமி' என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதிலும், வீராசாமி கதையல்ல காவியம் என தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. அமலாவில் ஆரம்பித்து மும்தாஜ் வரை பல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்துவைத்த பெருமை இவரையேச் சேரும். அடுக்குமொழிகளில் வசனம் பேசுவதில் இவரை மிஞ்ச இந்தப் பிரபஞ்சத்திலேயே ஆள் கிடையாது. தமிழிலும், ஆங்கிலத்திலும் கனெக்‌ஷன், கரெக்‌ஷன், கரப்ஷன் என ரைமிங்கிலும், டைமிங்கிலும் இப்படிக்கா போய் அப்படிக்கா வருவார். `நான் கைதட்டல் வாங்குவதற்காக பேசுறவன் அல்ல, பேசுவதற்காக கைத்தட்டல் வாங்குறவன்' எனவும், `முடி இருக்குன்றதால தலையை ஆட்டல, முடியும்ங்கிறதால தலையை ஆட்டுறேன்' எனவும் தன்னைப் பற்றிய பெருமைகளை பித்தளைப் பானைக்குள் போட்டு உருட்டுவார். இவர் கையில் ஒரே ஒரு டேபிள் மேட்டை கொடுத்தால் போதும் ஒன்பது படங்களுக்கு அதை வைத்து இசையமைத்து விடுவார். `கடல்' படத்தில் வரும் அர்ஜூன் அல்ல மேசைக்காரர், இவர் தான் உண்மையான மேசைக்காரர். இவரைக் கொண்டு போய் ஆப்பிரிக்கா காட்டில் விட்டாலும் அங்கு இருக்கும் மக்களைத் தன் இசையால் அட்ராக்ட் செய்து பிழைத்து விடுவார். வாயில் ட்ரம்ஸ் மட்டுமல்ல செனாய், வயலின் போன்ற இசைகளையும் வாசித்து பிரம்மிப்பூட்டுவார். அரசியல் வாழ்க்கையிலும் இவர் வேற லெவல். ஒருமுறை `உங்கக் கட்சி மாநாட்டுக்கு கூட்டமே வரலையே?' என ஒருவர் கேட்டதற்கு, கோபத்தை நாவி கமலத்தில் இருந்து நாக்கிற்கு டிராஃன்ஸ்பர் செய்து வெளுத்து வாங்கினார். சமீபத்தில் கூட `போயஸ் தோட்டத்தில் பூ பறிச்சுட்டு இருக்கீங்களா?' என ரத்தத்தின் ரத்தங்களை சைடு கேப்பில் சம்பவம் செய்தார்.

வேதனைகள் :


அடிக்கடி மக்களோடு நேரலையில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒருமுறை நேரலையிலேயே, `நீங்க ஓவரா பேசுறீங்களே அதை குறைச்சுக்கோங்க, உங்களை மக்கள் காமெடி பீஸாகதான் பார்க்கிறார்கள்' என ஒருவர் கேட்டுவிட்டார். `வீராசாமி' படத்தில் க்ளைமாக்ஸில் வார்த்தை தவறியதற்காக இவர் உயிர் விடும் காட்சியை பார்த்தால் மனது இனம் புரியாத வேதனையடையும். `யார் யாருக்கோ ஆஸ்கர் கொடுக்குறாங்க டி.ஆர் சாருக்கு கொடுத்தால் என்ன?' என இவரது ரசிகர்கள் வருத்தப்படுவதுண்டு. ப்ச்ச்...

மேலும் படிக்க :

முமைத்தும், மும்தாஜும்
புறநானூற்றுப் புலி
ஆப்பிரிக்கன் கானா

மேலும் பார்க்க :

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick