சினிமால் | Cinemaal - cinema news - Timepass | டைம்பாஸ்

சினிமால்

* ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்துவரும் படம் `வனமகன்'. இப்படத்துக்கான பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. தற்போது வியட்நாமில் ஷூட்டிங் நடந்துவருகிறது. ஹாரிஸ் இசையமைத்துவரும் இப்படம் மே மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #பெயர் சூப்பர்!

* சமீபத்தில் முறுக்கு மீசையும், தாடியுமாக புது கெட்டப்பில் வலம் வருகிறார் விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படத்துக்குத்தான் இந்த கெட்டப். இப்படத்தில் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய்யின் 61-வது படத்தை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. வடிவேலு-சத்யன் இருவரும் காமெடிக்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்! #மீசைய நல்லா முறுக்கு!  

* வைரமுத்து, யுவன் கூட்டணியில் முதலில் உருவான படம் ‘இடம், பொருள் ஏவல்’ இன்னும் வெளிவராத நிலையில் ‘தர்மதுரை’ வெளியாகி ஹிட்டடித்தது. அதே கூட்டணி மீண்டும் அமீரின் ‘சந்தனத்தேவன்’ படத்துக்காக இணைந்திருக்கிறது. இப்படம் மட்டுமின்றி இந்த வருடம் நான்கு படங்களில் யுவனும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றவிருக்கிறார்கள். #நல்ல விஷயம்!

 * `வடசென்னை' பட ஷூட்டிங்கை ஓரம்கட்டிவிட்டு, வெற்றிமாறனின் கவனம் ஜல்லிக்கட்டுப் பக்கம் திரும்பியிருக்கிறது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய `வாடிவாசல்’ கதையை மையமாகக்கொண்டு, திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வாடிவாசல் கதையும், தற்போதைய ஜல்லிக்கட்டு தடையும், அதன்பின்னான அரசியலையும் பேசவிருக்கிறது வெற்றிமாறனின் திரைக்கதை. #வாங்க, வாங்க!

* மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த துல்கர் சல்மானின் படம் ‘சார்லி’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை விஜய் இயக்குகிறார். துல்கர் கதாபாத்திரத்தில் மாதவனும், பார்வதி ரோலில் சாய் பல்லவியும் நடிக்க இருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் உறுதியானதும், படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. #காம்போ இடிக்குதே?

* மலையாளத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த படம் `புலிமுருகன்'. மோகன்லால், கமலினி முகர்ஜி, நமீதா நடிப்பில் அக்டோபர் 7-ல் ரிலீஸானது. 37 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 100 கோடி கிளப்பில் இணைந்த முதல் மலையாளப்படம் இது. இதே டைட்டிலில் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். இப்படத்திற்கான தமிழ் டயலாக்கை ஆர்.பி.பாலா எழுதுகிறார். விரைவில் மலையாள புலிமுருகன் தமிழிலும் வேட்டையாடவிருக்கிறான். #பாயட்டும்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick