ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

நெருப்பு நடிகருக்கு மகளாக நடித்தால் பட வாய்ப்பும், சம்பளமும் குவியும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார் பாப்கட் நடிகை. அத்தனை வாய்ப்புகளும் சின்ன பட்ஜெட் படங்களாகவே வருவதோடு, நடிக்கும் படங்களும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடப்பதால் சோகத்தில் மூழ்கிவிட்டார்.

ளபதி நடிகரை வைத்து மீண்டும் படம் இயக்கவிருக்கும் காப்பி பேஸ்ட் இயக்குநர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்திவிட்டாராம். 15 கோடி வரைக்கும் சம்பளம் கேட்க, கோபமான தயாரிப்பு, தளபதிக்காகத் தர முடிவெடுத்திருக்கிறது.

`அடல்ட் ஒன்லி நடிகை போல நானும் நடிக்க ஆசைப்படுகிறேன்' என பாலிவுட் நடிகை `பட்'டுன்னு சொல்லச்சொல்ல, நான்கு சுவர் இயக்குநர்கள் எல்லோரும், பாலிவுட் நடிகையின் வீட்டை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். `ஏன் இப்படிச் சொன்னோம்?' என நொந்துகொண்டிருக்கிறார், நடிகை.

`அழகும் திறமையும் இருந்தாலும், செகண்ட் ஹீரோயினாக நடிக்கக் கேட்டு வருகிறார்கள்' என்று டான்ஸ் நடிகரிடம் புலம்பியிருக்கிறார் கண்மணி நடிகை. `இன்னும் கொஞ்சம் ஒல்லி ஆயிடுங்க. கண்டிப்பா வாய்ப்புகள் வரும்' எனச் சமாதானம் சொன்னாராம் நடிகர்.

விரல் நடிகரின் படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் மழை நடிகை. வயதாகிவிட்டதால் வாய்ப்பும் நமத்துபோய்விட்டதாம். நிலைமையை சரிகட்ட கவர்ச்சியாக போட்டோ ஷூட் எடுத்து எல்லாப்பக்கமும் உலாவ விட்டிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick