பதில் சொல்லுங்க பாஸ்! | Timepass readers interaction in facebook - Timepass | டைம்பாஸ்

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

 பழைய கல்யாண ஆல்பங்களைப் பார்க்கும்போது திருமணமானவர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்?


மது : அன்னிக்கே எவனாவது சீப்பை எடுத்து ஒளிச்சு வெச்சிருந்தான்னா இன்னிக்கு நான் இப்படிப் புலம்பிக்கிட்டு இருந்திருப்பேனா..?

கிங் தூத்துக்குடி : போட்டோகிராஃபரையும், பெண்ணையும் இன்னும் கொஞ்சம் நல்லா தேடியிருக்கலாமோ..?

ரூபிணி : இப்போ இதைப் பார்க்கலைங்கிறது மட்டும்தான் குறைச்சல்.

மதுமதி : படத்துல வர்ற மாதிரி தாலி கட்டும்போது யாராவது ‘நிப்பாட்டுங்ங்ங்ங்க...’ னு கத்தியிருந்தா நல்லாயிருந்திருக்குமே.

சரவணன் : ஆடிய ஆட்டமென்ன... பேசிய வார்த்தை என்ன... தேடிய செல்வமென்ன... திரண்டதோர் சுற்றமென்ன... குழியில் விழுந்தபின் கூடவே வருவதென்ன..?

ஜம்புலிங்கம் : பாவம் பண்ணிட்டியேடா, பாவம் பண்ணிட்டியே...

பாஷா யூசுப்:  கட்டதுரைக்குக் கட்டம் சரியில்லை...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick