கொக்கிபீடியா - சசிகலா | Kokkipidia - Sasikala - Timepass | டைம்பாஸ்

கொக்கிபீடியா - சசிகலா

பெயர்     : சசிகலா

பிறப்பு     : 29 ஜனவரி, 1957

வயது     : 60

இருப்பிடம்     : சென்னை

சசிகலா என்பவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய பொதுச்செயலாளர் ஆவார்.

சாதனைகள் :

இவர் எண்ணற்ற வியத்தகு சாதனைகளுக்குச் சொந்தக்காரர். அம்மா, ஐயா, அக்கா போன்ற தங்கமான உறவுகளால் சூழப்பட்டுள்ள தமிழக அரசியலில் சின்னம்மாவாக உயர்ந்திருப்பவர். தமிழக முதலமைச்சர் கையில் ஒரு கிலோ மிக்சர் பாக்கெட்டை வாங்கிக் கொடுத்தவர். நாபிக்கமலத்தில் இருந்து எனர்ஜியை டிரான்ஸ்ஃபர் செய்து நாக்கு வலிக்கக் கத்தும் அரசியல்வாதிகளுக்கு இடையில், `சூது கவ்வும்' படத்தில் வரும்  இன்ஸ்பெக்டர் பிரம்மா போல அமைதியாக இருந்தே அசால்ட்டு செய்தவர். `ஒரு வியாபாரத்துக்கு வந்துட்டோம்னா டிட்டோ அதே மாதிரி ஆகிடணும். சிங்கம் வேஷம் போட்டால் சீறணும், புலி வேஷம் போட்டால் பாயணும்' என்பதற்கேற்ப வாழ்ந்துவருகிறார் இவர். சில நாட்களாக, கொண்டையில் இருந்து, வாட்ச் வரை அப்படியே ஜெயலலிதாவின் ஸ்டைலை ஃபாலோ செய்துகொண்டிருக்கிறார். இவர்தான் முதல்வராக வேண்டும் எனப் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நேற்றுகூட ‘ஒட்டுசிட்டு ஓணா முட்ட லைக் பண்ணலைனா டொம்மு’ முகநூல் பக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. `ஜெயலலிதாவின் ஒரே மனசாட்சி சசிகலாதான், இந்தியாவையே வழிநடத்தும் திறமை எங்கள் சின்னம்மாவுக்கு உண்டு!' என்கிறார் பொன்னையன். எல்லாவற்றுகும் மேலாக, சென்னையைவிட மன்னையை பிரபலமாக்கியதில் மன்னை சாதிக் அளவுக்கு இவருக்கும் பங்கு உண்டு.

வேதனைகள் :

இவருக்கு இருக்கும் சமீபத்திய வேதனை, பொது இடங்களில் ஒட்டப்படும் இவரது போஸ்டர்களின் மேல் ஒரு குரூப் புதுப்புது ஐட்டமா எறிந்துவருகிறது. ஜெயா டி.வி-யைத் தவிர, மற்ற எல்லா இடங்களிலும் டார் டாராய் கிழித்து டரியலாக்கிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். கட்சி, ஆட்சி தலைமை ஒருவரிடமே இருக்க வேண்டும் என ஓ.பி.எஸ்-ஸையும் வேதனைப் படுத்திவருகிறார்கள்.

குழப்பங்கள் :

அன்று இவர் சைகைகளால் என்ன சொன்னார் என்பது இன்றும் தெரியவில்லை. அதேபோல், அப்போலோவை நினைத்தால் ஆயிரம் குழப்பங்கள் குத்த வைத்து கும்மியடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. இன்னும் ஊருக்குள் பலர் சசிகலாவுக்கும், சசிகலா புஷ்பாவுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பி வருகின்றனர்.  எல்லாவற்றுக்கும் மேல் பெருங்குழப்பம் என்னவென்றால், இவர் சின்ன அம்மாவா... இல்லை சின்னம்மாவா?

மேலும் பார்க்க :
     தலைவன் பாஸ் நடிக்கும் தலைவன்
     `சின்னம்மா சிலுக்கம்மா சொல்லு சொல்லு' பாடல்
    ஜெயா டி.வி செய்திகள்
     சின்ன சின்னம்மா பேரவை

மேலும் படிக்க :
     ஜனகராஜ் பாட்ஷா ஆவது எப்படி?
     சின்னம்மா காவியம்
     சின்னம்மா சூடும் பொன்மாலைகள்

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick