ஸ்மார்ட் பைக்! | Smart Bike - Timepass | டைம்பாஸ்

ஸ்மார்ட் பைக்!

ட்டோமேட்டிக் கார்கள் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் தானியங்கி பைக்குகள் இதுவரை வரவில்லை. இருசக்கர வாகனங்களைப் பொறுத்தவரை வேகத்துக்கு இணையாகப் பாதுகாப்பு வசதிகள் இருக்காது என்கிற கருத்தைப் பொய்யாக்கும் விதமாகக் களம் இறங்கியுள்ளது ஹோண்டா நிறுவனம். தயாரிப்பு நிறைவடைந்தாலும் இன்னும் சந்தைக்கு வராத இந்த பைக், தானாகவே ஸ்டாண்ட் இல்லாமல் இரு சக்கரங்களில் தரையில் செங்குத்தாக நிற்கவும், சற்று சரிந்தும் சாயாமல் மெதுவாகப் புறப்பட்டு ஓடவும் செய்கிறது. பள்ளம் மேடுகளுக்கேற்ப தனது உடலை நீட்டிக், குறுக்கிக்கொள்ளும் வசதிகளும் இருப்பதால் வாகனத்தில் இருந்து தூக்கியெறியப்படும் அபாயமும் மிகக்குறைவு என்பது இந்த பைக்கின் சிறப்பம்சமாகும். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற புதிய ரக வாகன வடிவமைப்புக் கண்காட்சியில் இந்த பைக் முன்னோட்டம் நடைபெற்றது.
நிறுத்துனா நிக்கிற ஆளா நீ..!

- விக்கி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick