சிங்கமேவ ஜெயதே! | Singam 3 Movie - Timepass | டைம்பாஸ்

சிங்கமேவ ஜெயதே!

குடியரசு தினம் அன்னிக்கு நான்முக சிங்கத்தை டி.வி-யில பார்த்தப்போதான், நம்ம சூர்யா படங்களுக்கும், தேசியச் சின்னங்களுக்கும் உள்ள குண்டக்க மண்டக்க கனெக்டிவிட்டி கண்ணுல வந்துபோச்சு. இதோ...

 நாலு சிங்க முகங்கள் சின்னத்துல இருந்தாலும், மூணு மட்டும்தான் நம்ம கண்ணுக்குத் தெரியும். அதேமாதிரிதான் பாருங்க இப்போ மூணு சிங்கம் வரைக்கும்தான் படமாக எடுத்திருக்காங்க. ஆல்ரெடி வந்த ‘சிங்கம்’ படத்திலேயே ‘என்னோட நாலாவது முகத்தைப் பாத்துடாத, தாங்க மாட்ட’னு வேற லைட்டா சொல்லி வெச்சிருக்காரு. இது என்ன மாதிரியான உள்குத்துன்னு தெரியலை. அப்புறம் நடுவில் உள்ள அசோகச் சக்கரத்துல இருக்குற 24 ஆரக்கால்களையும் குறிக்கத்தான் ‘24’னு டைட்டில் வெச்சுப் படம் நடிச்சாரோன்னு வேற சந்தேகமா இருக்கு பாஸ்!

 சூர்யா வெச்சிருக்கிற சிங்கம் மீசையைக்கூட ‘ஹாக்கிப்பேட்டு மீசை ஹாக்கிப்பேட்டு மீசை’னு சந்தானம் ஒரு படத்துல கலாய்க்கும்போது தெரியலை. இப்போ ஓரமா உட்கார்ந்து ஆழமா யோசிக்கும்போதுதான், ‘ஆக்சுவலா ஹாக்கி நம்ம தேசிய விளையாட்டு. ஒருவேளை அதனாலதான் அவரு வெச்சிருக்கிற அந்த மீசையை அப்படிச் சொல்லிருப்பாங்களோ’னு நினைக்கத் தோணுது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick