சினிமால் | Cinemaal - cinema news - Timepass | டைம்பாஸ்

சினிமால்

* கிம் கர்தாஷியனுக்குப் பிறகு தன் எமோஜி ஸ்டிக்கர்கள் அடங்கிய மொபைல் அப்ளிகேஷனைத் தானே வெளியிட்டிருக்கிறார் நடிகை சோனம் கபூர். `நீர்ஜா' படம் மற்றும் தனது போட்டோ ஷூட் படங்களை எமோஜி ஸ்டிக்கர்களாக மாற்றி இறக்கியிருக்கிறார் சோனம். இதன் மூலம் தன்னுடைய அப்ளிகேஷனை தானே வெளியிடும் முதல் பிரபலமாகியிருக்கிறார். #எதுக்க்க்கு?

* அரவிந்த்சுவாமியை வைத்து ‘புதையல்’ படம் இயக்கியவர் செல்வா. இப்போது மீண்டும் அவரை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். படத்தின் ஹீரோயின் ரித்திகா சிங். இன்னொரு ஹீரோயினாக நந்திதா நடிக்க, மூன்றாவது ஹீரோயினுக்கு தேடுதல் நடந்து கொண்டிருக்கிறதாம். #ஹிட் கொடுக்க வாழ்த்துகள்!

* ‘பாபநாசம்’ படத்தில் கமல் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். இப்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படப்பிடிப்புகள் அடுத்த மாதம் துவங்க இருப்பதால், அதற்கு முன் நானியுடன் நடிக்கும் படத்துக்காக அமெரிக்கா பறந்திருக்கிறார். #லவ்லி!

* ஜல்லிக்கட்டுக்கான தீர்ப்பின் எதிரொலியாய் கர்நாடகாவில் `கம்பாளா'வுக்கான தடையையும் நீக்கக் கோரி குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில், தான் அடுத்து நடிக்கும் படமான ‘ஈசூரு டங்கே’ படத்தில் காளைக்கு ஒரு முக்கிய ரோல் கொடுத்திருக்கிறார் ஷிவ்ராஜ்குமார். படத்தில் அதனுடன் விளையாடுவது போன்ற காட்சிகளும் இருக்கிறதாம். #டைமிங்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick