ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

ஆஃப் த ரெக்கார்டு!

* பட்டதாரி நடிகையும், பட்டண இயக்குநரும் மீண்டும் இணையவிருக்கிறார்களாம். திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு, `நடிகையின் நடிப்பு ஆர்வமே காரணம்' எனக் கூறப்பட்ட நிலையில், `அது இல்ல வேற' என விளக்கம் கொடுத்திருந்தார் இயக்குநர். கருத்து வேறுபாடு நீங்கிவிட்டதால், கூடிய விரையில் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாமாம். 

* நம்பர் நடிகையும், இரட்டைக் கடவுள் இயக்குநரும் காதலித்து வருவது தெரியும். இந்நிலையில், நடிகைக்கு கதை சொல்ல வரும் இயக்குநர்கள், முதலில் தன்னிடம்தான் கதை சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையைப் போட்டிருக்கிறாராம் இயக்குநர். இதனால், அப்செட்டில் இருக்கிறார்கள் சில சீனியர் இயக்குநர்கள்.

* சங்க நடிகருடன் நெருக்கமாக இருந்த வாரிசு நடிகை, இப்போது விரல் நடிகருடன் அதிகமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாராம். சங்க நடிகருக்கும், விரல் நடிகருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருக்கும்போது, `என் ஆதரவு இவருக்குத்தான்' என்பதுபோல் இருக்கிறது நடிகையின் நடவடிக்கை. வருத்தத்தில் இருக்கிறார் சங்கம்.

* நடித்த படங்கள் ஹிட் லிஸ்ட்டில் இருந்தாலும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் குழப்பத்தில் இருக்கிறாராம் மங்கள நடிகை. அறிமுகப்படுத்திய இயக்குநரின் முதல் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருக்கிறார்கள். `சம்பளமே இல்லைனாலும் பரவாயில்லை' என இயக்குநரைச் சந்திக்க, `புதுமுகங்களுக்குத்தான் வாய்ப்பு' எனத் திருப்பி அனுப்பிவிட்டாராம்.

* பெல்லியாக இருந்து ஒல்லி ஆவதுதான் வழக்கம். ஆனால் சுனாமி நடிகை, குண்டாகும் முயற்சியில் இருக்கிறார். `கொழுகொழுனு இருந்தாதான், சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்' என நடிகையின் தாய்க்குலம் சொன்ன அட்வைஸால் இந்த முடிவாம்!

பாலிவுட்டில் நடித்த படம் படுதோல்வி என்றாலும், தொடர்ந்து இங்கிலீஷ் நடிகைக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டிருக்கின்றன. பாலிவுட் பரிந்துரைகளுக்கு ஒல்லி நடிகரும் காரணம் என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க