ஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்! | BJP against jallikattu - Timepass | டைம்பாஸ்

ஒரு கட்சியும் ஒன்பது ஓட்டைகளும்!

ல்லிக்கட்டு பிரச்னை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தபோது தமிழக பி.ஜே.பி தலைவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை, ஜல்லிக்கட்டை விட ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது. `ஜல்லிக்கட்டு நடக்குமா, நடக்காதா?' என்ற விவாதம் கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் முழுக்க பரவிவந்த நேரத்தில் தமிழகத்துக்கு வருகின்ற பி.ஜே.பி தலைவர்களும், தமிழகம் முழுக்கச் சுற்றிவந்த பி.ஜே.பி நிர்வாகிகளும், `கண்டிப்பாக ஜல்லிக்கட்டு நடக்கும்' என அடித்துச்சொல்லி வந்தார்கள். இந்த நேரத்தில்தான், உச்சநீதிமன்றம், `ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உத்தரவுபோட முடியாது!' என்று அறிவிக்க... மாணவர்கள் போராட்டத்தில் தீவிரமாக இறங்கினார்கள். தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு எதிராக உருவான மக்களின் கோபத்தைச் சமாளிக்க பி.ஜே.பி தலைவர்கள் பட்டபாடு இருக்கிறதே... அப்பப்பா! யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது.

``ஜல்லிக்கட்டு தடைக்கு முதல் காரணம் தி.மு.க-வும், காங்கிரஸும்தான்'' என்று போகிற இடங்களில் எல்லாம் சொன்ன தமிழிசை, ``தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் அதை ஆதரிப்போம்'' என்றார்.

``நானே காளையை அவிழ்த்து விடுவேன்'' என்று சொன்ன ஹெச்.ராஜா, சிங்கம்புனரி ஜல்லிக்கட்டில் தன்னுடைய காளையைக் கொண்டுவந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ``மாணவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறேன். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தலாம். அதேநேரம், காவல்துறை வழக்கு போட்டால் ஏற்றுக்கொள்வேன்'' என்றார்.

``ஜல்லிக்கட்டு நடத்தமுடியாமல் போனதற்கு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று ரெண்டு பக்கத்துக்கு அறிக்கைவிட்டுக் கண்ணீர் சிந்தினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick