``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு?'' | Interview With Politician H Raja - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

``சுப்பிரமணியன் சுவாமி சொன்னதில் என்ன தவறு?''

திரடியாக கருத்துகளைக் கூறி, அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துபவர் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அவரைச் சந்தித்துப் பேசினேன். தற்போதைய அரசியல் சூழலுக்கான கேள்விகளுக்கும், தன் பாணி பதில்களைத் தருகிறார்...

 ``மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?''

``ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களும் இதில் கொண்டுவரப்பட்டுள்ளது. 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வருமானம் பெருகிறவர்களுக்கான வருமானவரி பத்து சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தமிழனுக்கு பொருந்தாது என்று சொல்லியுள்ளார்களா? தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு மத்திய அரசைக் குற்றம் சொல்ல வேண்டும் என்பதே பொழப்பாப்போச்சு. உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு என ஒதுக்கப்பட்ட நிதியில் தமிழகத்துக்கும்தான் திட்டங்கள் உள்ளன. திராவிடக் கட்சித் தலைவர்களின் தீய நோக்கம், `தமிழக மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக' பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்!''

நீங்க எப்படி பீல் பண்றீங்க