காதலர் தினம் கசக்குதய்யா! | valentine day special - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

காதலர் தினம் கசக்குதய்யா!

`எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை'னு லவ்வர்ஸ்லாம் அடிச்சுக்கிட்டாலும் பிடிச்சுக்கிட்டாலும் நிம்மதியாதான் இருப்பாய்ங்க.

ஆனா `லவ்வர்ஸ் டே'னு ஒரு நாளைக் கொண்டுவந்து இவிங்க படுத்துற பாடு இருக்கே... அய்யய்யோ... அந்தத் துயரத்தில் சில...

 லவ்வர்ஸ் டே-யின் முதல் குழப்பமே என்ன கலர் ட்ரெஸ் போடுறது என்பதுதான். கருப்பு கலர்ல போட்டா காதல் தோல்வின்னும் சிவப்பு போட்டா ஆல்ரெடி ஆள் இருக்குன்னும், பச்சை போட்டா ட்ரை பண்ணலாம்னும் விதவிதமான ட்ரெஸ் கோடுகள். இதெல்லாம் எவன்யா கண்டுபிடிச்சான்? பச்சை, மஞ்சள், சிவப்பு, ஊதானு எல்லா கலருக்கும் ஆப்பு வெச்சா என்னத்தைத்தான் போடுறது? ஒரே கன்ஃபியூசா இருக்கே நாராயணா..!

 அடுத்து மேக்-அப். நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு பூ, ரோஸ்லாம் வெச்சிட்டுப் போனா வீட்டுல முறைப்பாங்க. கொஞ்சம் டல் லுக்ல போனா இந்தப் புள்ளைக்கு காதல் தோல்வி போலனு ஊர்ல எகத்தாளமா பேசுவாய்ங்க. நார்மலா போலாம்னா நம்ம காதல் வயப்பட்ட மனசு ஒத்துக்காது. எல்லாப் பக்கமும் கேட்டைப் போட்டா இன்னாதான் பண்றது..?

 லவ்வர்ஸ் டே அன்னிக்கோ இல்லை ரெண்டு நாளைக்கு முன்னாலயோ எந்த கிஃப்ட் ஷாப்புக்கும் போகக்கூடாது. பார்க்கிற பார்வையே சரி இருக்காது. அதெல்லாம் மீறி தைரியத்தை வரவழைச்சுட்டுப் போய் ஒருமணி நேரமா மண்டையைக் குழப்பி ஒரு கிஃப்ட்டை செலக்ட் பண்ணினா, சேல்ஸ் கேர்ள் இதையா வாங்கித் தரப் போறீங்க... இதை ட்ரை பண்ணுங்கனு வேறு எதையாவது காட்டி அட்வைஸ் பண்ணும். ஏம்மா... என் லவ்வருக்கு நான் ஏன்மா என் சொந்தக்காசைப் போட்டு உன் டேஸ்ட்ல கிஃப்ட் வாங்கித் தரணும்..?

 சின்னப்புள்ளையில இருந்தே சாக்லேட் வாங்கித் தின்ன அண்ணாச்சி கடைக்குப் போனா அன்னிக்கு ஒரு டெய்ரி மில்க் வாங்க முடியாது. சந்தேகக்கண்ணோட பார்ப்பாரு. அதுவும் இல்லாம அந்தச் சந்தேகத்தை சந்தோசமா வீட்டுலயும் போட்டுக் கொடுத்துடுவாரு. இது தேவையா...

நீங்க எப்படி பீல் பண்றீங்க