பஸ்ஸுனா பதறுதே! | Bus Travel Journey in Local Bus - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

பஸ்ஸுனா பதறுதே!

ஸ் பயணத்தில் பத்திட்டு வர்ற அனுபவங்களைப் பற்றிய ஒரு சின்ன ட்ராவல். லெட்ஸ் ஸ்டார்ட்!

ஸ்டாப் 1 :
  பலபேருக்கு முதல் அனுபவமே காலையில கூட்டத்துல கும்மி அடிக்கிற அனுபவமாதான் இருக்கும். ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போற குரூப், சும்மா சுத்துற அதிமுக்கியமான குரூப்னு ஊரு உலகத்துல இருக்கும் எல்லோரும் சங்கமிக்கிற இடம்னா, அது பஸ்ஸு மட்டும்தான். சங்கமிச்சு என்ன செய்ய? சிறுசுல இருந்து பெருசு வரை... கூட்டத்துல நம்மளை ஆப்பிள் ஜூஸாப் புழிஞ்சு போட்டுடுதே!

ஸ்டாப் 2 :
அல்டிமேட் பிராப்ளம் என்னன்னா, சரியான சில்லறைக் கொடுத்து டிக்கெட் வாங்குறது. இருக்கிற நிலைமைக்கு ஏ.டி.எம்-ல பணம் வர்றதே அதிசயம். வந்தா, 2000 ரூபாய்க்குச் சில்லறை கிடைக்கிறது அதிசயம்.

`நீ கேட்குற பத்து, இருபதுக்கு நாங்க எங்கய்யா போவோம்?'ன்னு நீங்க பொழம்புறது கேட்குது. வேற வழி? `சில்ற இல்லீங்களே?'னு மூஞ்சியை வெச்சுக்கிட்டு கண்டக்டரைப் பரிதாபமா பார்த்தோம்னா, நமக்கு அர்ச்சனைதான் விழும். நேரம் நல்லா இருந்துச்சுன்னா, `வெயிட் பண்ணு, சில்ற தரேன்'னு சொல்வார். பிறகு? பணமில்லா ஏ.டி.எம் மாதிரி `சில்லறை வருமா... வராதா?'ன்னு பரிதாபமா நிற்கவேண்டியதுதான்!

ஸ்டாப் 3 : நம்மளை வெச்சு என்டர்டெயின்மென்ட் பண்றதுக்காகவே ‘சவுண்ட் சரோஜா’, ‘ரவுடி ரங்கராஜன்’னு பல கேரக்டர்கள் லைன் கட்டி வருவாங்க. ‘நகர்ந்துதான் நிக்கிறது, இடமா இல்ல?’ன்னு ஏக்கரா கணக்குல இடம் இருக்கற மாதிரியே வந்து ஏறுவாய்ங்க. இன்னும் சிலபேர், `உள்ளே போங்க' கோஷத்தோட ஏறுவாங்க. அடேய்களா... இடமில்லாம கம்பியைப் பிடிச்சுத் தொங்கிட்டு வர்ற என்னைப் பார்த்தாடா, இப்படிப் பேசுறீங்க?

 ஸ்டாப் 4 :
மோடி இந்தியாவுல இருக்கிறது எட்டாவது உலக அதிசயம்னா, நமக்கு பஸ்ல சீட்டு கிடைக்கறது அதிசயம் நம்பர் 9. அதுல பாருங்க, சீட் கிடைச்ச அன்னிக்குன்னு பார்த்து, கொஞ்சம் பீம புஷ்டி சாப்பிட்ட அம்மா ஒண்ணு பக்கத்துல உக்காந்து நம்மளை நசுக்கிப் பூந்தியாக்கிட்டுப் போயிடும். அடுத்து வர்றவர், நம்மளைப் பத்தமடை பாயா நினைச்சு யூஸ் பண்ணிட்டுப் போவாங்க. கடைசியில ஏறுறவனாவது ஒழுங்கா இருக்கணுமே? அவன்தான் நம்மளைத் தலையணையா வெச்சுத் தூங்கி விழுவான். எத்தனை துயரம்!

ஸ்டாப் 5 :
மேலே சொன்னது எல்லாம் போக, பஸ் பஞ்சர் ஆகிப் பாதி வழியில நின்னு, அர்த்தம் விளங்காத ஆதி காலத்துப் பாட்டை ஹை-டெசிபல்ல கதற விட்டு கடுப்பேத்துறது, பஸ்ல வர்ற வீடியோவை மெய் மறந்து பாத்துட்டு இருக்கும்போது, பர்ஸு பறிபோறது, எம்.பி சீட் பிடிச்ச மாதிரி `ஆளு வர்றாங்க'ன்னு சொல்லியே பஸ்ஸுல இருக்கிற அம்புட்டு சீட்டையும் ஆக்கிரமிக்கிறதுன்னு ஆயிரெத்தெட்டு பிரச்னை பாஸ்.

உங்களுக்கு எப்படி?

- ச.ஆனந்தப்பிரியா

நீங்க எப்படி பீல் பண்றீங்க