கதை விடுறாங்க! | One line story - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

கதை விடுறாங்க!

‘தன் காதலி பரிசளித்த கிஃப்ட்டைத் திறந்து பார்த்த முத்து அதிர்ந்தான்...’ - இந்த ஒருவரியை டெவலப் செய்து, நம்ம டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன சுவாரஸ்யமாக சொன்ன குட்டிக்கதை!

பழனி ராஜன் : அதில் எழுதபட்ட வாசகம்தான் காரணம். “அண்ணா நான் ஜியோ வாங்கிவிட்டேன். உங்களது சேவைக்கு நன்றி!‘’

சிகு : கிஃப்ட் கொடுத்ததே ஓர் அதிர்ச்சியான விஷயம்தான். அதற்குமேல் ஓர் அதிர்ச்சி என்ன இருக்கப் போகிறது?.

சி.கே. சரவணன் : காளை மாட்டை அடக்கினால்தான் கல்யாணம் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

குமரன் நாகராஜன் : உள்ளே ஒரு மிக்சர் பாக்கெட் இருந்தது.

நரேன் ஏமி : அதில் அவன் காதலியின் கல்யாண போட்டோ இருந்தது.

இளங்கோ செல்வன் :
அதில் ஒரு காகிதம் மட்டும் இருந்தது. அதில், `படித்தவுடன் கிழித்துவிடவும்' என்று எழுதப்பட்டிருந்தது.

ரமேஷ் எம். ரசீத் : பீட்டா ப்ரின்ட் போட்ட டி-ஷர்ட் இருந்தது. `மறுபடியுமா' என்று மயக்கமடைந்தான்.

அன்பானவன் இளந்தமிழ் :
`இனிமேல் வெளிநாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தாதே...' என்ற வாசகத்தோடு ஐபோனை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்திருந்தாள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க