சாட்டிங் டாவ்வ்வ்..! | Always Chatting With Friends - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

சாட்டிங் டாவ்வ்வ்..!

`காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு'ங்கிற காலம் எல்லாம் போய், இப்ப எந்நேரமும் `சாட்'ங்கிற காலம் வந்தாச்சு. அந்த அளவுக்கு `வாட்ஸ்அப்'லேயும், ஃபேஸ்புக்குலேயும் மாறி மாறி எப்பவும் சாட் பண்ணிட்டே இருக்கிறதுதான் இப்போ இருக்கிற மக்களோட ட்ரெண்ட். இப்படி விடாம எப்பவும் சாட் பண்றாங்களே, அந்த சாட்ல எத்தனை வகை இருக்குனு நம்மில் யாருக்காவது தெரியுமா?

`அவனா நீ' சாட் : வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல பண்ற சாட்ல முக்கியமான டைப் ஆஃப் சாட்தான் இது. சோஷியல் மீடியாவில் சாட் பண்ற முக்கால்வாசிப் பேர் இந்த வட்டத்துக்குள்ள கண்டிப்பா இருப்பாங்க. வேற எதுவும் இல்லை பாஸ். பொண்ணுனு நினைச்சுக்கிட்டு கடைசிவரைக்கும் ஏதாவது ஒரு ஃபேக் ஐடிகிட்ட பேசிக்கிட்டு இருக்கிறதுதான் இந்த `அவனா நீ’ சாட். நாம பேசுறப்போ என்னவோ ரோஜா மாதிரி ஒரு பொண்ணுனு நினைச்சுதான் கடைசிவரைக்கும் பேசிக்கிட்டே இருப்போம். பட், அது ரோஜா வேஷம் போட்டு இருக்குற ராஜானு ரொம்ப காலத்துக்கு அப்புறம்தான் பாஸ் தெரியும். சிலர் அது பொண்ணு இல்லைனு தெரிஞ்ச அப்புறமும் கடலையை கன்டினியூ பண்ணுவாங்க....அது ஒரு ஃபீல் ப்ரோ. நமக்கெல்லாம் புரியாது.

ஆல்வேஸ் சிங்கிள்டாவ் சாட் : சாட் பண்றதுலேயே தேவதாஸ் காலத்து பழைய டைப் சாட் இருக்கு. அதுதான் இந்த ஒன்சைட் லவ்வர்ஸ் பண்ற சாட். ஒன்சைடா லவ் பண்ற பொண்ணுகிட்ட `காதல் வாராதா காதல் வாராதா'ங்கிற ரேஞ்சுக்கு எப்பவும் ஃபீலிங்ஸோட சாட் பண்ணிட்டே இருப்பாங்க. என்னதான் அந்தப் பொண்ணு அவனை பிளாக் பண்ணி இருந்தாலும்கூட, விடாம மெசெஜ் பண்ணி ரிப்ளைக்குக் காத்துக்கிட்டே இருப்பாங்க. உங்களுக்கு எல்லாம் கடைசிவரைக்கும் `காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி’தான் பாஸ். என்ன நடந்தாலும் இவங்ககிட்ட அவங்களோட லவ் ஸ்டோரியை மட்டும் கேட்டுடாதீங்க. அவங்க சொல்ற லவ் ஸ்டோரில காதல் இல்லை... `கா'கூட இருக்காது.

டீ ஆத்துற சாட் : நம்ம நாட்டுல என்ன பிரச்னை நடந்தாலும் வாட்ஸ்அப் க்ரூப்ல கவலையே இல்லாம காலை வணக்கம் சொல்றவங்கதான் இந்த `டீ ஆத்துற சாட்' க்ரூப். க்ரூப் ஆரம்பிச்சு மூணு வருஷம் ஆகி, அந்த க்ரூப் மோட்ச நிலையை அடைஞ்சு இருந்தாகூட இவங்க மட்டும் காலை வணக்கம் மெசேஜை தவறாம அனுப்பிக்கிட்டே இருப்பாங்க. காலை வணக்கம் அனுப்புறது மட்டும் இல்லாம, நான்கு வருஷத்துக்கு முன்னாடி தேவைப்பட்ட `அவசர ரத்த உதவி' மெசேஜைக்கூட இப்போ கடமை தவறாம ஃபார்வேர்ட் பண்ணுவாங்க. என்னதான் வாட்ஸ்அப், வைபர்னு உலகம் முன்னாடி போனாலும் இவங்க என்னமோ எப்பவும் 80-லயேதான் இருப்பாங்க. யாருமே இல்லாத கடைல யாருக்கு பாஸ் டீ ஆத்துறீங்க?

`புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க’ சாட் : இந்தப் புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க டைப் சாட்தான் இருக்கிற வாட்ஸ்அப் சாட்லேயே ரொம்ப மோசமான வகையறா. புதுசா லவ் பண்ண ஆரம்பிச்ச ஜோடிங்க எல்லாம் இந்த லிஸ்ட்டுக்கு கீழதான் பாஸ் வருவாங்க. லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து மாத்தி மாத்தி `இரவா பகலா குளிரா வெயிலா... சாட்-ஐ ஒன்றும் செய்யாதடி'ன்னு பாட்டுப் பாடி எப்பவும் பேசிகிட்டே இருப்பாங்க. இவங்க சாட் ஹிஸ்டரி, டைனோசர் ஹிஸ்டரியைவிட ரொம்பப் பெரிய ஹிஸ்டரியா இருக்கும். ஃப்ரெண்ட்ஸ் ஆனாலும் சாட் பண்ணதைப் பார்த்தா, `என்ன சாப்பிட்ட, அடுத்து, ம்ம்ம், அடுத்து ம்ம்ம்’ - அதைத் தவிர வேற எதுவுமே பேசி இருக்க மாட்டாங்க. ஆண்ட்ராய்ட் அறுபது நாள், மொபைல் முப்பது நாள் அவ்வளவுதான் பாஸ்.

`ராத்திரி நேரத்து பூஜையில்’ சாட் : வாட்ஸ்அப், ஃபேஸ்புக் சாட்ல கொஞ்சம் கதி கலங்கவைக்கிற டைப் சாட்னா அது `கண்டிப்பா ராத்திரி நேரத்து பூஜை’ டைப்பாதான் இருக்கும். யாருனே தெரியாதவங்ககிட்டயும், பேசி ரெண்டே நாள் ஆனவங்ககிட்டயும் போய் `ஜில்லுனு காத்து ஜன்னல சாத்து'ங்குற ரேஞ்சுக்கு ஒரே ரொமான்டிக் ஃபீலிங்கோட பேசிட்டு இருப்பாங்க. இன்னும் சில பசங்க எல்லாம் பொண்ணுங்ககிட்ட ரொமான்ஸா பேசினது பத்தாதுனு பசங்ககிட்டயும் ஒரே ரொமான்டிக் ரோமியோவா பேசிட்டு இருப்பாங்க. காக்கா... குயில் மேல ஆசைப்படலாம் பாஸ். டைனோசர் மேல ஆசைப்படலாமா?

`மெல்லிசான கோடு’ சாட் :
காதலா, ஃப்ரெண்ட்ஷிப்பானு முடிவு செய்யாம `நட்ட நடு ஆஃப் சென்டர்ல' பண்ற சாட் எல்லாமே மெல்லிசான கோடு சாட்தான். இந்த மாதிரி மெல்லிசான கோடுலேயே பேசின பல சாட்தான் கடைசியில் காதலா மலர்ந்து இப்போ ஊட்டியில் பூந்தோட்டமா விளைஞ்சு இருக்கு. அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் மாற்றங்கள் வந்தாலும் இவங்க லைஃப்ல மட்டும் சிலபல மாற்றங்கள்கூட வராம கடைசிவரைக்கும் ஃப்ரெண்ட்ஸாவே இருப்பாங்க. அந்த மாதிரி எப்பவுமே ஃப்ரெண்ட் ஸோன்லயே இருக்கிறவங்களும் இந்த சாட் குரூப்புக்கு கீழதான் வருவாங்க பாஸ். ஆக மொத்தத்துல... நண்பேன்டாவ்வ்வ்!

- லோ.சியாம் சுந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க