நீங்கல்லாம் யாருடா? | School Days Funny Love - Timepass | டைம்பாஸ்

நீங்கல்லாம் யாருடா?

நாம ஒரு பொண்ணை சும்மா பார்த்தாலே, அந்தப் பொண்ணுதான் என் லவ்வர்னு நம்மளையே நம்ப வெச்சு ஏதோ அவன் லவ்வுல பி.ஹெச்.டி வாங்குன மாதிரி, `உன் லவ்வுக்கு நான் உதவி பண்றேன்டா. ஒரே மாசத்துல அந்த பொண்ணுகூட கைகோத்து நடக்க வைக்கிறேன்!'னு உறுதிமொழி கொடுத்து, நம்மளை வெச்சு டெஸ்ட் பண்ணுவான். இதோ, இப்படித்தான்...

`காதலோட முதல் படி, அந்தப் பொண்ணை நீ லவ் பண்ணுறேனு சொல்லாம, அவளுக்குத் தெரியணும்டா'னு நம்ம பய சொல்லுவான். `அதெப்படி மச்சி தெரியாம இருக்கும்?'னு நாம திருப்பிக் கேட்டா, `அதுக்குத்தான் நான் இருக்கேன்'னு சொல்லி, அந்தப் பொண்ணு போகும்போது, வரும்போதெல்லாம் `ஸ்ரீதர்... டேய் ஸ்ரீதர்'னு நம்ம பெயரைச் சத்தமா சொல்லி, ஏலம் விட்டுக்கிட்டு இருப்பான். அந்தப் பொண்ணுக்கிட்ட நம்ம பெயரைப் பதிவு பண்றானாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick