படித்தவுடன் சிரித்துவிடவும்..! | Trend Poetry For Lover - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

படித்தவுடன் சிரித்துவிடவும்..!

ப்போ ட்ரெண்ட்ல இருக்கிற சில வார்த்தைகளையும், வசனங்களையும் வெச்சுக் கவிதை கவிதையா (?) எழுதி காதலிக்கு அனுப்பினா எப்படி இருக்கும்னு குப்புறப்படுத்து குதர்க்கமா யோசிச்சு இந்தக் கவிதைகளை எழுதி இருக்கோம். இவற்றைப் படிச்சுக் காட்டி காதலைக் கன்னாபின்னாவென ஆரம்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ம்!

அன்பே,
நீ உண்மையான தமிழச்சியாக இருந்தால்
உன் கருங்கல் இதயத்தை காதலோடு ஷேர் செய்.

பேபி,
எல்லோரும் `அவளும் நானும்' என்கிறார்கள்.
அப்படியே சொல்வதற்கு
நீயும் நானும் வேறு வேறா என்ன..?

நம் காதலுக்கு எதிராக
500, 1000 என்று எத்தனை பேர் வந்தால் என்ன?
எல்லோரையும் செய்திடுவேன்
டிமானிடைசேஷன்.

உன்னை அத்தனை `விவேகத்துடன்' காதலிக்கிறேன்
என் காதலின் `கொலப் பசியை'த் தீர்க்க
நீ `வர்லாம் வா'!

ஜல்லிக்கட்டுதான் இப்போதைக்கு போராட்டம்
உனக்கு தாலிக்கட்டத்தான் எனக்கு
எப்போதுமே போராட்டம்.

மெரினாவில் கலந்த கச்சா எண்ணெயாய்
கரைகிறது உன் காதல்
எப்போது வருவாய் என்னை
சுத்தப்படுத்த..?

உன்னைப் போலவே
உன் `சார்ந்தோர்' மீதும் அன்பாய் இருப்பேன்
ஏன் என்னை `பொறுக்கி' என்கிறாய்?

உன் அம்மாவை மட்டுமல்ல
உன் சின்னம்மாவையும்
பத்திரமாய் பார்த்துக்கொள்வேன்
பயப்படாமல் ஓடி வா.

கடைசியாக,
படித்தவுடன் கிழிக்கவும்..!


- லோ.சியாம் சுந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க