இணையத்தில் இணைந்திருப்போம்..! | Reader Support for Timepass Magazine - Timepass | டைம்பாஸ்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/02/2017)

இணையத்தில் இணைந்திருப்போம்..!

வணக்கம் பாஸ்!

`கூத்து, கேலி, கலாய்' - இந்தத் தாரகமந்திரத்தை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்டதுதான் டைம்பாஸ். `பாஸ், இது டைம்பாஸுக்கு எல்லாம் பாஸ்' என்று வாசகர்களும் ஆனந்தக்கூத்தாடி ஆதரித்தார்கள். அப்போது மன்மோகன்சிங் பிரதமர். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதித்திருந்தார். அதைக் கலாய்த்து ஒபாமாவைப் பலசரக்குக்கடை முதலாளியாகவும் மன்மோகனைப் பொட்டலம் மடிப்பவராகவும் சித்திரித்து நாம் போட்ட கார்ட்டூன் மரண மாஸ். நாடாளுமன்றத்தில் அதை எதிர்க்கட்சிகள் காட்டி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

இதுமட்டுமா... இன்னும் இன்னும் ஏராளமான அங்கீகாரங்கள் டைம்பாஸுக்குக் கிடைத்தன. அரசியல், சினிமா, ஸ்போர்ட்ஸ் என்று ‘டைம்பாஸ்’ கலாய்க்காத ஆட்களும் இல்லை; ஆளுமைகளும் இல்லை. ‘செமையா கலாய்ச்சிருக்காங்க’ என்று சிரித்து மகிழ்ந்தவர்களும் உண்டு; எரிமலை ஏகாம்பரமாகி, செம காண்டாகிக் கடுப்பானவர்களும் உண்டு. அந்தக் கட்சி, இந்தக் கட்சி, அந்த நடிகர், இந்த நடிகர் என்றில்லாமல், ‘என் கடன் கலாய்ப்பதே’ என்று வகைதொகையில்லாமல் கலாய்ப்பதே டைம்பாஸின் கருத்தாக இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க