சினிமா விடுகதை! | cinema riddles - Timepass | டைம்பாஸ்

சினிமா விடுகதை!

ட்ரெண்ட் செட்டர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மெலோடி பாடல்கள்தான் பாஸ் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள்.

1. காதலனைக் கொஞ்சலாக அழைக்கும் வார்த்தையிலே தொடங்கும் பாடல் முதல் சுற்றிலேயே ஜெயித்தது. மழலைக் குரலை மயக்கும் குரலாக மாற்றியதிலும் சக்சஸ். பாட்டென்ன பாஸ்?

2. மேலிருந்து வீழும் அருவியில்லாமல் மாயம் காட்டிய நதியின் பாடல். முதிய காதலைச் சொன்னவிதத்தில் புதுப் பாடலாசிரியருக்குச் சிவப்புக் கம்பளமென்றால் `ஆக்‌ஷன் படத்தில் இப்படியொரு மெலோடியா!' என்று மகிழ்ச்சியடைந்தார்கள் மக்கள். பாட்டைச் சொல்லுங்க பாஸ்.

3. தலைநகரம் பெயரில் அமைந்த படத்தில் காதலைக் கசியவைத்த தாபப்பூவின் மென்மை இது. வட சென்னை பாஷை பேசும் கதாநாயகிக்கான மொழியில் பாடல் இல்லையென்ற லாஜிக்கை மறக்கவைத்த மேஜிக் மியூஸிக். பாட்டுப் பாடுங்க பாஸ்.

4. நிஜமும் கனவுமாய் விரிந்த படத்தில் கனவுப்பாடல்தான் இது. ஆனாலும் நிஜத்தில் மெலோடியாய் வசீகரித்தது. எளிய வரிகளும் அதிக இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இல்லாத இசையும் பலரின் காலர் டியூனாகவும் ரிங்டோனாகவும் அமைந்தன. பாட்டு என்னவோ?

5. டான்ஸே ஆடவில்லை நடனத்தில் கெட்டியான சூப்பர் ஹீரோ. ஆனால் பாடல் முழுவதும் லேசான உடல் குலுக்கலிலே ஒட்டுமொத்தமாய் கவர்ந்தாரே... அழகு ஹீரோயினை வர்ணித்துப் பாடும் பாடலில் நின்ற இடத்திலிருந்தே ஹிட் பரப்பினார். பாட்டுப் பாட வாங்க.

6. கானா பாடல்களுக்கு அட்டகாச என்ட்ரி கொடுத்த படம் என்றாலும் இடம்பெற்ற ஒரே மெலோடியும் தேடிச் சரணடைய வைத்தது. படத்தின் பெயர் டம்மி என்றாலும் வசூலிலும் பெயரிலும் ஷார்ப். பாட்டு என்ன பாட்டு?

7.
படத்தின் பெயரில் குயில் இருக்கும். பாட்டெல்லாம் மனசுக்குள் இனிப்பாய் கூவியதே... கண்தெரியாத உலகின் நிஜத்தை நிழலாய் உணர்த்திய வரிகள்... பாட்டு என்னன்னு கூவுங்கோ.

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick