ஹா(லிவு)ட் டைரி | hollywood diary - Gemma Arterton - Timepass | டைம்பாஸ்

ஹா(லிவு)ட் டைரி

‘க்ளாஷ் ஆஃப் தி டைட்டன்ஸ்’, ‘பிரின்ஸ் ஆஃப் பெர்ஷியா’  போன்ற படங்களில் நடித்த ஜெம்மா அர்தர்டன் னின் ஹாட்  பக்கங்களைத்தான் இந்த வாரம் பார்க்கப்போகிறோம். 

*இங்கிலாந்தின் கென்ட் மாகாணத்தில் பிறந்த ஜெம்மாவின் அப்பா ஒரு வெல்டர். அம்மா க்ளீனர். பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பச்சூழல் ஜெம்மாவுக்கு. #ஃபீனிக்ஸ் பறவை!

*பள்ளியில் படிக்கும்போதே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அப்போதே சிறந்த நடிகைக்கான விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார். #அப்பவும் இப்பவும்!

*ஒருநாள் திடீரென ஸ்கூலுக்கு முழுக்குப் போட்டவர், அடுத்து போய் நின்றது நடிப்புப் பள்ளியில். அங்கே முழு ஸ்காலர்ஷிப் கிடைக்க, ஜொலிக்க ஆரம்பித்தார். #இங்கே இதை ஹீரோக்கள்தான் பண்ணுவாங்க!

*சினிமாவில் முதல் பிரேக் கிடைத்தது ஜேம்ஸ்பாண்ட் படமான ‘க்வாண்டம் ஆஃப் சோலஸ்’ஸில். 1500 பேர் ஆடிஷனுக்கு வந்தாலும் தேர்வானது ஜெம்மாதான். #வாவ்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick