‘ட்ரெண்ட்’ பெட்டி! | What's trending in online - Timepass | டைம்பாஸ்

‘ட்ரெண்ட்’ பெட்டி!

சின்னம்மா முதல்வர்

பிப்ரவரி 5-ம் தேதி கூடிய அ.தி.மு.க கட்சிக் கூட்டத்தில், முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை முதல்வர் பொறுப்பேற்கவும் அழைப்பு விடுத்தார். சசிகலா முதல்வராகப் பதவி ஏற்பார் என அந்தக் கட்சியில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் #sasikala என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. ஆனால், சசிகலா முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார் என்ற செய்தி பரவியதை அடுத்து நெட்டிசன்ஸ் வெவ்வேறு வகையில் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவிக்கத் தொடங்கினர். சசிகலா முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக எல்லோரும் பேசத் தொடங்கியதை அடுத்து #TNSaysNo2Sasi என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியது. இந்த டேக் ட்ரெண்ட் ஆகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே #sasikala டேக்கை பின்னுக்குத் தள்ளி இந்திய அளவில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தது. இந்தியாவின் வெவ்வேறு மாநிலத்தில் உள்ள மக்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். இந்த டேக்குடன் #AIADMK #SasikalaNatarajan #Chinnamma என்பதும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. அட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick