சினிமால்

காமெடியிலிருந்து ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சபதம் எடுத்த சந்தானத்தின் மார்க்கெட் எகிறிக்கிடக்கிறது. செல்வராகவன் இயக்கத்தில், யுவன் இசையில் சந்தானம் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே, ஒட்டுமொத்த கோலிவுட்டும் பொறாமையில் உச் கொட்டிவருகிறது. இப்படத்தில் நாயகியாக அதிதி பொஹன்கர் என்ற மராத்தி நடிகை நடிக்கிறார். சந்தானத்தின் மற்ற இரு படங்களான `சர்வர் சுந்தரம்', `சக்கப்போடு போடு ராஜா' படங்களின் ஹீரோயினான வைபவி ஷாந்தாலியாவும் மராத்தி நடிகைதான். #வாழ்வுதான்!

நம்பர்களில் படத்தின் டைட்டில்கள் வைப்பது குறிஞ்சிப்பூ போலத் தான். `180', `3', `24', `555' என்று நம்பர் தலைப்பில் வந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் `நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' பட ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிக்கவிருக்கும் படத்துக்கு `96' என்று பெயரிட்டுள்ளனர். ரோடு மூவியாக உருவாகும் இப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக த்ரிஷாவிற்கு கதாபாத்திரம் இருக்கிறதாம். மற்ற நடிகர், நடிககைகளின் தேர்வு உறுதியானதும் படப்பிடிப்பு செல்லப் படக்குழு திட்டம்! # நம்பர் 1!

பி.வாசுவின் கன்னட ஹிட் திரைப்படமான `சிவலிங்கா'வின் தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். தமன் இசையில், அனிருத் இப்படத்துக்காக பாடியிருக்கும் பாடல் ‘ரங்கு ரக்கர...’ பாடல், `வேதாளம்' படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ ரேஞ்சுக்கு ஹிட் அடிக்கும் என்கிறார்கள். படத்துக்கு இப்பாடல் கூடுதல் பலம் சேர்க்குமாம்! #தூளும்மா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்