சல்ஃபி கானா | Songs Remake - Timepass | டைம்பாஸ்

சல்ஃபி கானா

பாட்டுக்கு மெட்டுப் போடுற பழக்கம் பல வருஷமா புழக்கத்துலே இருக்கு. அப்படியே இந்த ‘மெட்டுப்போடு...’ பாட்டுக்கே பாட்டுப் போட்டுப் பார்க்கலாமேனு யோசிச்சா...

தங்கமே லைக்ஸுக்கு இல்லை தட்டுப்பாடு
ஒரு போட்டோ இருக்குது மீம்ஸ் இருக்குது ஸ்டேட்டஸ் போடு
எத்தனை குரூப்புகள் கண்டோம்... எத்தனை எத்தனை பேஜ்களும் கண்டோம்
அத்தனையையும் மென்சன் பண்ணி டேக்கைப் போடு!
ஸ்டேட்டஸ் போடு... ஸ்டேட்டஸ் போடு
மார்க் கொடுத்த லைக்ஸுக்கு இல்லை தட்டுப்பாடு..!
ஸ்டேட்டஸ் போடு... மச்சி ஸ்டேட்டஸ் போடு!
அட... ஃப்ரெண்ட் லிஸ்டுக்கு உண்டு, லைக்ஸுக்கு இல்லை கட்டுப்பாடு..!
இது யூஸர் போஸ்ட்டு... நம் டைம்லைன் போஸ்ட்டு
இது நமக்காகப் போராடும் பொங்கல் போஸ்ட்டு
‘ப்ரியா ஸ்வீட்டி’ போடும் குட் நைட் போஸ்ட்டு
ஊரெல்லாம் லைக் குவிக்கும் ஃபேமஸ் போஸ்ட்டு
எங்கேயோ சுட்ட போஸ்ட்டு... கெத்து காட்டும் போஸ்ட்டு
ஷேரிங்ஸ் நிறைய தெறித்துக் கொட்டும் போஸ்ட்டு
‘நைஸ் டோலி’ கமென்ட்கள் குவிக்கும் போஸ்ட்ட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick