அப்பாடக்கர் பதில்கள் | Appatakkar answers - Timepass | டைம்பாஸ்

அப்பாடக்கர் பதில்கள்

‘`2016-ன் மிகப்பெரிய ஜோக் எது?’’ - கல்யாண சுந்தரம், சேலம்.

2016 என்பதே பெரிய ஜோக்தான். இந்த 2016-ல்தானே முதல்வர் ஆகப்போகிறேன் என்று சீமான் முதல் அன்புமணி வரை கியூவில் நின்றார்கள்.

‘`கறுப்புப் பணம் எல்லாம் மெய்யாலுமே வெள்ளையா மாறிடுமா..? மாறிட்டா என்ன மாற்றம் கொண்டு வருவாங்க? மாறலைனா மறுபடியும் மாத்துவாங்களா..? இல்லை மாற்றத்துக்கான அறிகுறி ஏதும் இருக்கா? கொஞ்சமாச்சும் புரியற மாதிரி சொல்லுய்யா...’’ - ராகுல் கண்ணன்.

பேங்கிலோ ஏ.டி.எம் வாசலிலோ கியூவில் நிற்காமல் இவ்ளோ சாவகாசமா, இவ்...ளோ நீளமாக் கேள்வி கேட்கிற அளவுக்கு நீங்க ஃப்ரீயா இருக்கீங்களா? சரியில்லையே! அப்புறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்?

‘`ஒரே ஒரு கேள்வி... சென்னையில் எந்த ஏ.டி.எம்-மில் கூட்டம் குறைவா இருக்கு...?’’ -இளந்தமிழ்.

நான் இன்னைக்குக் காலையில் பார்த்தப்போ புரசைவாக்கம் ஏ.டி.எம் வாசலில் ஒரே ஒருத்தர்தான் இருந்தார். என்ன, ரெண்டு நிமிஷத்துல ஏ.டி.எம் ஷட்டரை இழுத்து மூடிட்டு அவரும் கிளம்பிட்டார்.

‘`சந்தானத்திற்கு ஹீரோ ஆசை தேவையா...?’’ - பரணிகுமார்.


அதைக்கூட ஏத்துக்கலாம். ஆனா இப்போ பல காமெடியன்கள், காமெடி பண்றேன்கிற பெயரில் மரண மொக்கை போடும்போது ‘இவங்களுக்கு காமெடியன் ஆசை தேவையா?’னு நினைக்கத்தோணுது. சேம் ப்ளட்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick