கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை! | Cashlesh Indian Life - Timepass | டைம்பாஸ்

கேஷ்லெஸ் 'இந்தியன்' வாழ்க்கை!

`கேஷ்லெஸ் இந்தியா'வுல `டைம்பாஸ்' பண்ண படத்துக்குப் போறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா? இதோ பாருங்க!

காலையில எந்திரிச்சி இன்னைக்கு என்னதான் பண்ணலாம்னு யோசிச்சு, `படத்துக்குப் போகலாம்'னு முடிவெடுத்து, டிக்கெட் புக் பண்ண நெட்டை ஓபன் பண்ணா... பாழாப்போன `ஐயோ' (பெயர் மாற்றப்பட்டுள்ளது) லோடு ஆகுறதுக்குள்ள சுடுதண்ணி காய்ஞ்சுடும்!

சரி, குளிச்சுக் கெளம்பி, `என்ன படம் ஓடுது?'னு நேரடியாவே பார்க்கக் கெளம்புவோம். அப்போதான் ஒருத்தர், `இப்பெல்லாம் எங்கப்பா சினிமா போஸ்டர் ஒட்டுறாங்க. சின்னம்மா போஸ்டர்தான்!'னு ஃபீல் பண்ணுவார். சரிதான்னு நேரடியாவே தியேட்டருக்குத்தான் போகணும்!

சினிமாவுக்குப் போறதுனா சும்மாவா? காத்து அடிச்சா பரவாயில்ல! குளிர் அடிச்சா பரவாயில்ல! மழை பெய்ஞ்சாலும் பரவாயில்ல! எதுக்கும் அலட்டிக்காம, குல்லாவுல இருந்து, ராணுவத்துல யூஸ் பண்ற பூட்ஸ் வரைக்கும் போட்டுப்போம்!

டிக்கெட் கவுன்டர் ஓபன் பண்ண ஒன்பது நிமிடம் இருக்கேனு டீ, பஜ்ஜி சாப்பிடலாம் கேன்டீன்ல கை நீட்டுவோம். கையில டீயும், வடையும் கெடைச்ச பிறகுதான் ஞாபகத்துக்கு வரும். நம்மகிட்ட இருக்கிறது ஒரே ஒரு பிங்க் கலர் நோட்டாச்சே!!! பிறகு? நீங்க பாட்டுக்கு `கோ கேஷ்லெஸ்'னு காசை நீட்டுனா, ஃபேஸ்லேயே அடி விழும். `இந்தாங்க உங்க டீயும், வடையும்'னு கொடுத்துட்டு, திரும்பிப் பார்க்காம தியேட்டருக்குள்ள புகுந்துடணும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick