கொண்டாட்டமா... க்ளிக்கலாம் வாங்க!

`வீக் எண்ட் கொண்டாட் டத்துக்கு தியேட்டருக்குப் போலாமா, பார்ட்டிக்குப் போலாமா, கேர்ள் ஃப்ரெண்ட்டோடு டேட்டிங் போலாமா?' என்றெல்லாம் பிளான் பண்ணுவோம். `அதெல்லாம் எதுக்கு? வாங்க போட்டோ எடுக்கலாம்’ எனக் கூப்பிடு கின்றனர் `சென்னை வீக் எண்ட் க்ளிக்கர்ஸ்'.

“போட்டோ எடுக்கணும்னு ஆர்வம் இருக்குற யாரு வேண்டுமானாலும் இதில் கலந்துக்கலாம். வயது வரம்பு கிடையாது. காசு பணமும் கிடையாது!’' எனச் சொல்லும் வீக் எண்ட் கிளிக்கர்ஸ் குரூப் இப்போது ஏழாவது வருட புகைப்படக் கண்காட்சியை நடத்துகிறார்கள்.

‘`ஜாக்சன், மணிமாறன், துரைசாமினு மூணு பேரு ஆரம்பிச்ச குரூப் இது. இப்போ ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு இடம் தெரியுதுன்னா, அதை குரூப்ல போடலாம். இந்தவாரம் இங்கே போட்டோஸ் எடுக்கலாம்னு அதுல ஆர்வமா இருக்கிறவுங்க அந்த வாரத்தை அந்த ஏரியாவுல க்ளிக் பண்ண ஆரம்பிச்சுருவாங்க. சென்னையிலேயே நிறைய போட்டோ வாக்கர்ஸ் குரூப் இருக்காங்க. ஆனாலும் நாங்க இதை ஏழு வருடமா பண்ணிட்டு இருக்கோம். முதல் நாலு வருடத்துல குரூப்ல உள்ளவங்க எடுத்த போட்டோஸ்ல பெஸ்ட் போட்டோக்களைத் தேர்ந்தெடுத்து, வருடக்கடைசியில கண்காட்சி நடத்தினோம். அஞ்சாவது வருடத்துல வெளிமாநிலங்கள்ல இருந்து வர்ற போட்டோக்களையும் போட்டிக்குத் தேர்ந்தெடுக்குறோம்!’’ - இது குரூப் வாய்ஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick