நாய்ச் செல்லங்கள்!

பிரியமான பிராணிகள் வரிசையில் எப்பவுமே முந்திக்கிட்டு முதல் வரிசையில் நிக்கறது நாய்தான். நம்ம தாத்தா காலத்துல இருந்தே நாய் என்றால் சுப்பிரமணிதான் ஞாபகத்துக்கு வரும். ஆனா இன்னைக்கு ஆலன்ல ஆரம்பிச்சு ப்ரூனோ வரை விதவிதமா வலம் வர்றாங்க. இவங்களையெல்லாம் வளர்க்கிறவங்க பண்ற அலப்பறை இருக்கே அய்யய்யோ... கண்ணைக் கட்டிக்கிட்டு வாங்க, காட்டுறேன்!

‘இது என்ன முருகேசா நா... நாய்தானே?’னு வார்த்தையை விழுங்கற அளவுக்குப் பயமுறுத்துற ஆள் உயர நாய் நம்ம வீட்ல வச்சிருந்தாலும், யாராவது நம்ம நாயைப் பார்த்து பயந்து நிற்கும்போது ‘ஒண்ணும் பண்ணாது. சும்மா குரைக்க மட்டும்தான் செய்யும்’னு நம்ம நாய்க்கு அவார்டு கொடுப்போம் பாருங்க. அது வந்தவங்களோட வயித்தெறிச்சலை இன்னும் அதிகமாக்கும்!

நாம பொத்திப் பொத்தி வளர்க்கிற நாயைக் காலையில சங்கிலி கட்டி வாக்கிங் கூட்டிக்கிட்டுப் போகும் போது அப்படியே சிங்கத்தோட போருக்குப் போற மாதிரி இருக்கும் பாருங்க சும்மா ஜிவ்வுன்னு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick