``பாலாவே என்னைப் பாராட்டினார்!''

சீரியல், ரியாலிட்டி ஷோ என சின்னத் திரையில் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த ஆனந்தி, தற்போது வெள்ளித்திரையிலும் முகம் காட்டத் தொடங்கிவிட்டார். ‘வாலு’, ‘மீகாமன்’, ‘தாரை தப்பட்டை’, ‘பறந்து செல்ல வா’ எனப் பல படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பவரைச் சந்தித்தேன்.

‘`ரியாலிட்டி ஷோக்களில் இருந்து சினிமாவுக்குள் வந்ததால் எந்த மாதிரியான ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது..?’’

‘`முதல்ல ‘கனா காணும் காலங்கள்’னு விஜய் டிவி-யோட சீரியலில் நடிச்சேன். அப்புறம் ‘மானாட மயிலாட’, ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில ஆடியிருக்கேன். நான் ஆடினதனாலதான் இப்போ சில படங்களில் நடிக்க வாய்ப்பு வருது. ரொம்பக் கவனமாதான் படங்களைத் தேர்வு செய்றேன். அதனால, ரியாலிட்டி ஷோக்கள் சினிமாவுக்குள் போக உதவி பண்ணும். சாதிக்கிறது நம்ம திறமையைப் பொறுத்துதான் இருக்கு!”

‘’ஷூட்டிங் ஸ்பாட்ல பாலா ரொம்பத் திட்டுவாராமே... ‘தாரை தப்பட்டை’யில நடிக்கும்போது எப்படி?’’

“பாலா சார் மனசுல நினைச்சு வெச்சிருக்கிற ஷாட் கிடைச்சிடுச்சுனா, திட்ட மாட்டார். அது ஒரே டேக்ல வந்துட்டா ரொம்பவும் சந்தோஷப்படுவார், பாராட்டுவார். திட்டு வாங்கின அனுபவம்னு எதுவும் இல்லை. ஒருநாள் படத்தோட முதல் பாடலை ஷூட் பண்ணிட்டு இருந்தோம். அந்தப் பாட்டோட மூடுல நான் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு ஓவரா ஆடிட்டேன். பாலா சார் என்னைக் கூப்பிட்டு, ‘நீ மட்டும் தனியா தெரியுறம்மா, அதுனால கொஞ்சம் கம்மி பண்ணியே ஆடிக்கோ’னு சொன்னார். அப்புறம் படத்துல ஒரு டபுள் மீனிங் சாங் வரும். முதல்ல நான் அதை பண்ணணுமானு யோசிச்சேன். அதுக்கப்புறம் பாலா சார் தான், ‘நீ இதை பண்ணு. நல்ல பேர் கிடைக்கும்’னு சொன்னார். எனக்கு உடம்பு சரியில்லாதபோதுதான் அந்தப் பாட்டை ஷூட் பண்ணினாங்க. நான் அதையும் மீறி நல்லா பண்ணினதால சார் என்னை ரொம்பப் பாராட்டினார்.”

‘`எந்த மாதிரியான கேரக்டர்கள் நடிக்க ஆசை...?’’

“போல்டான கேரக்டர்கள் நடிக்கணும்கிறதுதான் என் ஆசை. அதுக்காக நெகட்டிவ் கேரக்டர் பண்ணணும்னு சொல்ல வரலை. ‘அருந்ததி’ படத்துல அனுஷ்கா பண்ணியிருப்பாங்களே, அந்த மாதிரியான கேரக்டர். ஹீரோயினாதான் நடிப்பேன்னு சொல்லலை. நான் நடிக்கிற கேரக்டர் அந்தப் படத்துல முக்கியமானதா இருக்கணும். அந்த மாதிரி கேரக்டர்கள் சீரியலில் கிடைச்சாலும் நான் நடிக்கத் தயார். சின்னத்திரை, சினிமா எதுல நடிச்சாலும் நல்ல நடிகைனு பெயர் வாங்கணும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick