``கன்னக்குழியில விழுந்ததைக் கவனிக்கல!''

‘புத்தம் புதுக் காலை... பொன்னிற வேளை’ என்ற ‘மேகா’ திரைப்படப் பாடலுக்கு தாவணியில் காட்சி தந்து ஆண்கள் மனதை தன் ரெண்டு கன்னக்குழிகளுக்குள் டெபாசிட் செய்துகொண்டவர் ஸ்ருஷ்டி டாங்கே!
`யுத்தம் செய்', `எனக்குள் ஒருவன்', `கத்துக்குட்டி', `தர்மதுரை', `அச்சமின்றி' எனத் தொடர்ந்து ஹோம்லியாகவும் கிளாமராகவும் கலந்துகட்டி நடித்து சிங்கிள் ரன் டூ சிக்ஸர் வரை விளாசித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.
 
`‘ஏடாகூடமா கேள்வி கேட்டா ‘பாஸ்’ சொல்லிடுவேன் ஆமா’'னு கண்டிஷன்ஸ் அப்ளையுடன் கியூட் ஸ்மைலியை அள்ளித் தெளிக்கிறார் ஸ்ருஷ்டி.

``முதல் கேள்வியே இதுதான். அந்தக் கன்னக்குழியில யாரெல்லாம் விழுந்தாங்க?''

``ஹாஹாஹா...இப்ப நான் க்ளீன் போல்டு. நிறைய பேர் விழுந்திட்டதா சொல்லி இருக்காங்க. ஆனா அவங்க விழுந்தப்ப அதை நான் கவனிக்கவே இல்லையே''

(இனிமே கவனிச்சு சொல்வீங் களா?!)

``சொல்லுங்க...நீங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க?''


``விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். சினிமாவுக்கு வந்த சம்பவம் எப்படி நடந்துச்சுனு எனக்கே மறந்துபோச்சு. யெஸ் இது ஒரு ஆக்ஸிடன்ட். திடீர்னு வந்தேன். இப்ப வேகமா ஓடிட்டு இருக்கேன். பேசிக்லி நான் ஜர்னலிஸம் படிச்சிருக்கேன். அதனால சினிமாவுக்கு வரலைனா டிவியில லைவ் ரிப்போர்ட்டிங் பண்ணிட்டு இருந்திருப்பேன். க்ரைம் ஸ்டோரின்னா ரொம்பப் பிடிக்கும்.''

``இதுவரைக்கும் நடிச்சதுல பிடிச்சது எந்த கேரக்டர்?''

``எல்லாமே பிடிச்சதுதான். ஆனா சாந்தனுகூட நடிச்ச `முப்பரிமாணம்' படத்துல என்னோட ரோல் ரொம்ப ஸ்பெஷல். அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேனே...''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick