சினிமால்

 ‘டோரா’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘கொலையுதிர்காலம்’ என, தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நயன்தாரா. கூடவே மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் படத்திலும் நடிக்கிறார். மிஷ்கினின் உதவியாளரான பரத் கிருஷ்ணமாச்சாரியின் படத்தில் பிரெஞ்சு நிருபராக நடிக்கிறார் நயன். இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதானாம். #நயன் டா!

முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்த கையோடு ‘வடசென்னை’ படத்தின் பணிகளுக்காக அமெரிக்கா சென்றார் வெற்றி மாறன். புதுவருட ஆரம்பத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பைத் துவங்கவிருக்கிறார்கள். தனுஷ் இயக்கி, நடித்துவரும் ‘பவர்பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், அவரும் ‘வடசென்னை’ படப்பிடிப்பில் கலந்துகொள்கிறாராம். #சிறப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்