“மன்னார்குடி மாஃபியாவை விரட்டுவேன்!”

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, தன்னைச் சிலுவையில் அறைந்துகொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர்  கராத்தே ஹுசைனி. தனது ரத்தத்தினால் ஜெயலலிதாவின் உருவத்தை வடிவமைத்து, ஜெ-விடமே பாராட்டுப் பெற்றவர். ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, அவரை நேரில் சந்திக்கும் அளவுக்கு இருந்த ஹுசைனி, தற்போது ஜெ. மரணம் தொடர்பாக, அடுக்கடுக்காகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவை திட்டமிட்டுக் கொன்று விட்டனர் என ஹுசைனி கூறிவரும் நிலையில், அவரைச் சந்தித்துப் பேசினேன்.

``திடீரென `அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பை' ஆரம்பித்து விட்டீர்களே?"


``நான் அம்மாவைச் சந்தித்தபோதெல்லாம் என்னைக் கட்சியில் சேருமாறு அழைத்தார்கள். எனக்கு அரசியலில் நாட்டம் இல்லாததால், விலகி இருந்தேன். தற்போது உள்ள சூழ்நிலை வேறுமாதிரியாக உள்ளது. அம்மாவின் மரணத்தில் உள்ள மர்மம் பற்றி எதிர்த்துக் கேட்க அ.தி.மு.க-வில் யாருக்கும் துணிச்சல் இல்லாத நிலையில், மன்னார்குடி மாஃபியாவை எதிர்த்துத் தனி மனிதனாக என்னால் போராட முடியாது. அதனால்தான், `அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறேன்''.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick