பொண்ணோட மனசு பொண்ணுக்குத்தான் தெரியும்!

சங்க, ஒருமணி நேரத்துக்கு முன்னாடி அவங்க வாழ்க்கையில என்ன நடந்துச்சுங்கிறதையே மறந்திடுவாங்க. ஆனா, பொண்ணுங்க அப்படி இல்லை. ரொம்ப ஷார்ப். ‘அன்னைக்கு ப்ரவுன் கலர் சட்டை, சாண்டல் கலர் பேண்ட் போட்டு இருந்தீல்ல?’னு ஞாபகம் வெச்சுப் பசங்களைத் திணறவிட்டு அடிக்கிறதுல கில்லி. சண்டை போடவே வராத பசங்களை இந்தப் பொண்ணுங்க படுத்துற பாடு சொல்லி மாளாது. இவங்ககிட்ட கொஞ்சம் உஷாரா இருக்க டிப்ஸ் வேணுமா பாய்ஸ்..?

* சண்டை போட்டுட்டு இருக்கும் போதே, `உனக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இதுல ஏதாவது ஒண்ணு இருந்தா தயவுசெஞ்சு எங்கூட பேசாதே!'னு சொல்வாங்க... அதுக்காகவெல்லாம் நீங்க பேசாம இருந்துடக் கூடாது. அப்புறம் `எவ்ளோ திமிரு இருந்தா நான் லூசு மாதிரி கத்திட்டு இருக்கேன். நீ கண்டுக்காம இருக்கே'ன்னு பழிச்சொல் உங்களை வந்து சேரும்.

* சரி எதுக்குடா வம்புனு நீங்க பதிலுக்குப் பேசுனா, `இவ்ளோ சொல்றேன் உனக்குக் கொஞ்சம்கூட வெட்கமில்லையா?'னு கேட்பாங்க... அந்த அவச்சொல்லுக்கெல்லாம் நீங்க அசரக் கூடாது. தொடர்ந்து போராடணும். போர் ஆமா போர்...

* இணையச் சண்டைதான் இப்போ லேட்டஸ்ட் ஃபேஷன். `என் போட்டோவுக்கு ஒரு லைக் இல்லை. அவளுக்கு ஹார்ட்டின் பறக்குதா?'னு ஆரம்பிச்சு `உன் போட்டோவுக்கு ஒரு பொண்ணு வாவ்னு கமென்ட் போட்ருக்கு. அவ யாரு புதுசா?'னு விசாரணைக் கமிஷன் வெச்சு அடிக்கிற அடியில ‘இனி யாருக்காவது லைக் போட்டாலோ இல்லை போட்டோ போட்டாலோ என்னைச் செருப்பாலயே அடி’னு நீங்க கதறுறதைப் பார்க்கிறதுல பொண்ணுங்களுக்கு ஒரு சந்தோசம்.

* `என்ன எப்போ பார்த்தாலும் ஆன்லைன்? ஆபீஸ்ல வேற வேலை இல்லையா?'னு கேட்பாங்க... கோவப்பட்டு, `நான் ஆன்லைன்ல இருக்கேனு உனக்கெப்படி தெரியும், அப்போ நீயும்தான ஆன்லைன்ல இருக்கே!'ன்னு கேட்கக் கூடாது. அப்புறம் பிளாஸ்திரிதான் மிஞ்சும்.

* வீட்டுல இருக்கிற பொண்ணுங்களை, `நீ சும்மாதானே இருக்கே'ன்னு கேட்கக் கூடாது. வேலைக்குப் போற பொண்ணுங்களை, `நீதான் ரொம்ப பிஸி'னு எள்ளி நகையாடக் கூடாது. அப்புறம் சேதாரம் உங்களுக்குத்தான். ஸோ... சூதானமா இருங்க.

* மனைவிகளோட மிகப்பெரிய ஆசையே கணவன்மார்கள் தன்னோட சமையலைப் பாராட்டணும்னுதான். உங்களுக்கு வாய் வலிச்சாலும் பரவாயில்லை. முத்து உதிர்ந்தாலும் பரவாயில்லை. `சாப்பாடு நல்லாருக்கும்மா'னு ஒருமுறையாவது சொல்லிட்டு வாயைக் கொப்புளிச்சிடுங்க.

* கிரிக்கெட் விளையாடுவீங்களோ இல்லை டி.வி-யில் பார்ப்பீங்களோ அதெல்லாம் உங்க இஷ்டம். ஆனா, `நீதான் செல்லம் முக்கியம். கிரிக்கெட்லாம் உனக்கு அடுத்துதான்'னு ஒரு பொய் சொன்னா தப்பிச்சிக்கலாம்... ஆமா... அம்மா சத்தியமா பொய் நல்லது.

* என்னதான் அழகா இருந்தாலும் நீங்க, ‘நீ அழகா இருக்கே’னு சொல்லப் போறதில்லை. அது அவங்களுக்கே தெரியும். ஆனா அவங்க முன்னாடியே வேற யாரையாவது, `நீங்க அழகா இருக்கீங்க. க்யூட்டா இருக்கீங்க'னு சொன்னீங்கனா சோலி முடிஞ்சுச்சு. பீ கேர்ஃபுல்.

* இயற்கையாவே பொண்ணுங்க சண்டை போடுறப்போ, `நான் அம்மா வீட்டுக்குப் போறேன் போறேன்'னு சவுண்ட் விட்டாலும் நிஜமா போக மாட்டாங்க. அப்படியே போனாலும் ரெண்டே நாள்ல அங்கே கெஸ்ட் பெர்ஃபார்மன்ஸ் கொடுத்துட்டுக் கிளம்பி வந்திடுவாங்க. ஏன்னா ஒருவேளை சண்டைனு அங்கே சொன்னாக்கூட ஃப்ரீ அட்வைஸைப் போட்டு திரும்ப உங்ககிட்டயே கொண்டுவந்து விட்டுருவாங்கனு பொண்ணுங்களுக்குத் தெரியும். தொல்லை ஒழிஞ்சதுனு சந்தோஷப்பட முடியாது பாய்ஸ்.

அதனால ஆகச்சிறந்த சண்டையைத் தடுக்கும் வழி என்பது ஒரே ஒரு, ‘ஸாரி..’, ‘நீ இல்லாம என்னால வாழ முடியாது’னு ஒரு பிட்டு. அட... அதானே உண்மையும்கூட... சொல்லிட்டுத்தான் போங்களேன். (ஸேம் சைடு கோல் போடுறேன்னு நினைச்சிடாதீங்க... மீ குட் கேர்ள்!)

- ரூபிணி தேன்மொழி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick