கொக்கிபீடியா - மு.க.அழகிரி | Kokkipedia - M.K.Azhagiri - Timepass | டைம்பாஸ்

கொக்கிபீடியா - மு.க.அழகிரி


பெயர்    : மு.க.அழகிரி

பிறப்பு    : 30 ஜனவரி, 1950

வயது    :
66

இருப்பிடம்    :
மதுரை

அழகிரி என்பவர் முன்னாள் மத்திய அமைச்சரும் தி.மு.க-வின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரும், தி.மு.க-வின் முன்னாள் உறுப்பினரும் ஆவார்.

சாதனைகள் :


‘தி.மு.க-வின் தியாகக்கடலே, அகில உலகத்தின் அஞ்சாநெஞ்சனே, தூங்காநகரத்தின் தூர்வாரியே, மதுரையின் மண்வெட்டியே, கட்சியின் கடப்பாரையே...’ போன்ற வாசகங்களே இவர் புகழ் சொல்லும். ‘அழகிரி என்றால் அன்பு கலந்த பயம் என்று அர்த்தம்’ என ‘அஞ்சா நெஞ்சரின் 63’ புத்தகத்தில் விவரமாக விளக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியின் முதல் எழுத்தும் ‘அ’, இவரது பெயரின் முதல் எழுத்தும் ‘அ’. அகில இந்திய எம்.ஜி.ஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மரூர்.தர்மலிங்கம் ஒருகாலத்தில் ‘இந்தியப் பிரதமர் அழகிரி, தமிழக முதல்வர் ஸ்டாலின்!’ என்ற கொள்கையோடு வாழ்ந்து வந்தவர். உலக அளவில் பிரபலமான வாஸ்து நிபுணர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் மகரிஷி டாக்டர். ஜெயக்குமார் என்பவர்கூட ‘தி.மு.க-வின் தலைமையை அழகிரிதான் கைப்பற்றுவார்’ எனக் கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க தோல்விடையும் என்பதை முன்கூட்டியே கணித்து கெத்து காட்டிய தீர்க்கதரிசி இவர். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் இவரது பிறந்தநாள் முடிந்து அடுத்த நாளே அடுத்த பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி போஸ்டர் ஒட்ட ஆரம்பித்துவிடுவார்கள். மதுரையின் நெருக்கடியான வீதிகளுக்குள் இன்னமும் எப்படி ஆடு மாடுகள் ஆரோக்கியமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதை இதனால் அறியலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick