டெக்மோரா

ரு வருஷம் ஆரம்பிக்குதுனா அது நமக்கு புதுசா ஏதோ ஒரு விஷயத்தை வைச்சிருக்குனு அர்த்தம். 2017ல என்னதான் 1000 டெக்னாலஜி புதுசா அறிமுகமாக இருந்தாலும் இப்ப லைன்ல இருக்குற இந்த ரெண்டு டெக்னாலஜி ரொம்பவே கவனிக்க வைக்கும் மக்களே!

ஹாலிவுட் படத்துல வர்ற மாதிரி திடீர்னு மனுஷன் ரோபோவா மாறி நடக்கிறது, கால்கள் இயந்திரமா மாறி நடக்க ஆரம்பிறது இதெல்லாம் நேர்ல நடந்தா எப்படி இருக்கும்? `எக்ஸோ ஸ்கெலிட்டன்' அமைப்பின் மூலமா மனிதர்களுக்கு இயந்திரக் கால்களைப் பொருத்துறதுதான் அதோட முக்கிய நோக்கம். பரபரனு ஆராய்ச்சி சக்சஸ் ஆகும் தருணத்தில் இருக்காங்க.

இன்னும் இந்தக் கருவி, சந்தைக்கு விற்பனைக்கு வரவில்லை. ஆனா, 2017ம் ஆண்டோட கவனிக்கத்தக்க கண்டுபிடிப்பா இது இருக்குமாம். நடக்க முடியாதவர்களால்கூட சகஜமாக நடக்க இந்த ரோபோட்டிக் கால்கள் பயன்படும்னு சொல்றாங்க. அயர்ன் மேன் மாதிரி அசால்ட்டா நடக்க இந்த எக்ஸோ ஸ்கெலிட்டன் பயன்படும்.

அடுத்தது ஆளே இல்லாம ஓடும் கார்கள். இப்பவே சோதனை ஓட்டம்லாம் முடிஞ்சு ரிலீஸுக்கு முதல் ஸ்டேஜ்ல இருக்குது இந்தக் கார். ட்ராபிக்கை  சமாளிச்சு சரியான பாதை இருந்தா தானாகவே ட்ரைவ் பண்ண முடியும்னு நிரூபிச்சிருக்காங்க. இருந்தாலும் ஆளில்லா கார்ல ஒரு சப்போர்ட்டிங் டிரைவர் வெச்சு டெஸ்ட் பண்றாங்க.

திடீர்னு வேகத்தை கன்ட்ரோல் பண்ண முடியாமப் போறதுதான் இதோட மைனஸாம். அதை சரிசெஞ்சு 2017ல என்ட்ரிக்குத் தயாராகின்றன ஆளில்லா கார்கள். அப்பறம் என்ன... தமிழ் சினிமால காரே ஹீரோயினைக் காப்பாத்தி ஹீரோகிட்ட சேர்த்து வைக்குற சீன் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கும்.

காலே இல்லாம நடக்கலாம், ஆளே இல்லாம ஓட்டலாம் இதுதான் 2017-ன் அல்டிமேட் டெக்னாலஜி!

- டெக்கி கய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick