சினிமால்

 தீபிகா படுகோனே நடித்துவரும் ஹாலிவுட் படமான `ட்ரிபிள் எக்ஸ்; ரிட்டர்ன் ஆஃப் தி ஸாண்டர் கேஜ்’ படத்தின் புரொமோஷனுக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளது ஒட்டுமொத்த படக்குழுவும். அனைத்து புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் தீபிகாவை திறமையான, அதிபயங்கரமான நடிகை என்று புகழ்ந்து தள்ளுகிறார் வின் டீசல். பொங்கல் ரிலீஸாவதற்கு இரண்டு நாட்கள் முன்னர் புரொமோஷனுக்காக தீபிகாவுடன் வின் டீசலும் இந்தியாவுக்கு பறந்துவரவிருக்கிறார். #டீசல் போட்டு வருவாப்டி!

`சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு செம பிஸியாக நடந்துவருகிறது. த்ரிஷா குழந்தைகளுடன் பாடுவது போன்ற காட்சியை தற்போது படமாகியிருக்கிறார்கள். அந்தப் பாடல் காட்சியில் த்ரிஷாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் ரம்யா நம்பீசன். இப்பாடல் பதிவையும் முடித்துவிட்டார் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா. # த்ரிஷா இல்லைனா த்ரிஷா தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்