ஆஃப் த ரெக்கார்டு! | Cinema gossips - Timepass | டைம்பாஸ்

ஆஃப் த ரெக்கார்டு!

* ரொமான்ஸில் டாப் கியர் போடும் இயக்குநரின் படத்தில் நடித்துவரும் ஒல்லி நடிகர் முத்தக்காட்சியில் நடிக்கத் தயங்கியிருக்கிறார். புதுமுக நடிகை `நடிப்புதானே’ என்று தைரியம் கொடுக்க, நடித்திருக்கிறார். ஆனால், படத்தில் எந்தவித ஆபாசக் காட்சிகளும் இருக்காதாம்.

* தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்து ஹிட் நாயகியாகச் சுற்றிவரும் நடிகை, மியூசிக் நடிகருடன் சண்டை வீரன் படத்தில் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். இவரின் ஒரே ஆசை, பளிச் நடிகையை வீழ்த்தி தமிழிலும் இடம் பிடிக்க வேண்டுமாம்.

* நம்பர் நடிகை எப்போதுமே  எமோஷனல் பார்ட்டி தான்.  காதலனுக்காக பச்சைக்குத்தியவர், இப்போது புது காதலனின் முதல் எழுத்து வடிவைக் காதணியில் போட்டு சுற்றிவருகிறாராம்.

* மொத்தமாக  ஒன்றரை வருடம் கால்ஷீட் கேட்டதால் பல நடிகர்கள் தெறித்து விட்டனர். ஆனால், தைரியமாக ஒப்புக்கொண்டார்கள் தனிஒருவனும், கடவுள் நடிகரும்! நிஜக் காரணம் என்னவென்றால் அடுத்தடுத்து படங்கள் குறைவாக இருப்பதால்தான் ஒன்றரை வருட கால்ஷீட்டையும் தர இந்த `இருவர்’ துணிந்தார்களாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick