பதில் சொல்லுங்க பாஸ்!

?நண்பர்களை நம்பி நீங்கள் மாட்டிக்கொண்ட சம்பவங்கள்?

கௌதம் சாமி : `பொங்கலுக்கு வா மச்சி... ஜாலியா படத்துக்குப் போலாம்'னு சொல்லி `ஆழ்வார்' படத்துக்குக் கூட்டிட்டுப்போயிட்டான் ஒரு படுபாவி.

கவுஸ் பாட்ஷா : சண்டைனு சொல்லிக் கூப்பிட்டானுங்க. நாங்க ஐந்து பேர் ஜாலியா சண்டை போடலாம்னு போனோம். அங்கே போய் பார்த்தா, 20-25 பேர் எங்களை அடிக்க வந்தானுங்க. அப்புறம் என்ன வெள்ளைக்கொடி காட்டித் தமிழனோட வீரத்தைக் காட்டிட்டு வந்தோம்.

வெங்கடேஷ் : ஒண்ணு ரெண்டா இருந்தா சொல்லலாம். இங்கே உடம்பே ரணமாகிக் கிடக்கு. போங்கப்பு.

இம்ரான் : கடைசிவரைக்கும் அவனுங்களும் படிக்காம என்னையும் படிக்கவிடாம அடுத்த செமஸ்டர்ல பார்த்துக்கலாம்னு ஆசைகாட்டி, இந்தியா-பாகிஸ்தான் பகலிரவு ஆட்டத்தைப் பார்க்க வெச்சு, அடுத்தநாள் பரீட்சையில் எல்லோருமே பாஸ் பண்ணிட்டு என்னை மட்டும் அடுத்த செமஸ்டர்ல எழுத வெச்சு, அதுலேயும் அரியர் வாங்கினதுதான். அவ்வ்வ்!

கிருஷ்ணன் : தல - தளபதி ரசிகர்கள்தான் எனக்கு நெருங்கிய நண்பர்கள். என்னோட துயரத்தை எழுதினாதான் தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick