ஜிம்முக்குப் போன ஜெமினி கணேசன்கள்! | Gym workout atrocities - Timepass | டைம்பாஸ்

ஜிம்முக்குப் போன ஜெமினி கணேசன்கள்!

ல்லா காலகட்டத்துலேயும் பசங்களுக்கு இருக்குற ஆசைதான் இது! அதாங்க... ஜிம்முக்குப் போய் உடம்பை ஏத்துறது. ஆழ்மனசுல இந்த ஆசை எப்பவுமே இருந்தாலும், `வாரணம் ஆயிரம்', `பாகுபலி', `தங்கல்' மாதிரி படங்கள் வரும்போது, உள்ளே இருக்குற அந்த ஆசை கருவாட்டுக் கொழம்பு வாசம் மாதிரி பீறிட்டு வந்துரும். எந்த அளவுக்கு ஹார்மோன் வேலைசெய்யும்னா, `அபிராமி அபிராமி' கமல் மாதிரி, `ஜிம்முக்கு போகணும் மச்சி! உடம்ப ரெடி பண்ணணும்டா'னு ரிப்பீட் மோடுல சொல்லிக்கிட்டே திரிவாங்க.

இவங்க அட்ராசிட்டி கொஞ்சநஞ்சமா?

ஆர்வக்கோளாறின் மொத்த உருவமா, ஃபார்வேர்டு சிக்ஸ் பேக் போட்டோக்களில் தங்களோட உடம்பைக் கற்பனை பண்ணிப் பார்த்து, அந்தப் பரவசத்துலேயே ஜிம்முல போய் ஒரு வருட சந்தா கட்டிருவாங்க. முதல் ரெண்டு வாரம் செம்ம பெர்ஃபார்மென்ஸ் காட்டுவாங்க. ஜிம்முல ஒரு எக்யூப்மென்ட் விட்டுவைக்காம வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணுவாங்க. டெடிக்கேஷன் டெடிக்கேஷன்.

கொஞ்சம் உடம்பு ஏறினதும் ஆரம்பிச்சுரும் `டிபி' செஷன். சும்மாவே செல்ஃபி தட்டுற நம்ம டியூட்ஸுக்கு சொல்லவா வேணும்? எஃப்.பி, வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்னு ஹேஷ்டேக் ச்சும்மா பறக்கும். `#ஜிம் லைஃப் #ஜிம் ஃப்ரீக், #ஜிம் போஸ்!' என சோஷியல் மீடியா முழுக்க மாஸ் சீன்தான். இந்த போட்டோஸுக்கு `வாவ்' ரியாக்‌ஷன் கொடுப்பாங்க பொண்ணுங்க. `அட்மிட் இட்... சிக்ஸ் பேக் வைக்கிற பசங்க யாரும் அதை ஒரே ஒரு பொண்ணுக்காக வைக்கிறதில்லை'னு, கடுப்புல ஒருத்தன் கமென்ட் பண்ணுவான். நண்பேன்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick