கொக்கிபீடியா - ஓ.பன்னீர் செல்வம்

பெயர்   : ஓ.பன்னீர் செல்வம்

பிறப்பு   : 14 ஜனவரி, 1951

வயது   : 66

இருப்பிடம் :
தமிழ்நாடு

ஓ.பன்னீர் செல்வம் என்பவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளராகவும், அவ்வப்போது முதல்வராகவும் இருந்து வருகிறார்.

சாதனைகள் :

அவரவர் முதல்வர் பதவிக்காக கால் நூற்றாண்டுக்கு மேல் காத்திருந்து, கலர் கலராக போஸ்டர்கள் அடித்து ஒட்டி, தொண்டை தண்ணீர் வற்றக் கத்தி என்னென்னவோ செய்துகொண்டிருக்க... ஓ.பன்னீர் செல்வம் அவர்களோ மூன்று முறை முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கிறார். பதவியை இவர் தேடிப்போகலை, அதுவா வந்துச்சு... இவரை நிமிர்ந்து நிற்க வெச்சுச்சு, சும்மா போட்டுத் தாக்குச்சு. இவர் பல சமயங்களில் பணிவுக்கே பன்றிக்காய்ச்சல் வரும் அளவுக்கு பணிவின் சிகரமாய் விளங்குவார், அதைப் பார்க்கும்போதெல்லாம் பேசாமல் இவருக்கு பணிவு செல்வம் எனப் பெயரை மாற்றிவிடலாமா எனும் அளவுக்கு தோன்றும். “அம்மா, நீங்கள் சாணக்கியனையும் மாணவனாக்கும் ஞானம் பெற்றவர். நீங்கள் ஊருக்கே வழிகாட்டும் சிந்தனை பெற்றவர் அம்மா... உங்களை வணங்க என்ன தவம் செய்தோம்” எனப் பட்ஜெட் கூட்டத்தில் கவிதை பாடி எதிர்க்கட்சிகளை தெறிக்கவிட்டவர். ‘தாய்நாடு காக்கும் தங்கத்தாரகை, நான் வணங்கும் தாயுருவத் தெய்வத்தின் தலை வணங்கி’ என ரைமிங்கிலும், டைமிங்கிலும் புகுந்து விளையாடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick