சினிமா விடுகதை! | Cinema riddles - Timepass | டைம்பாஸ்

சினிமா விடுகதை!

அஜித் ரெட்டை வேடமிட்டு நடித்த படங்கள்தான் பாஸ் இந்தவார சினிமா விடுகதைக்கான விடைகள்... கண்டு பிடிக்கலாமா?

1. செம, தூள், ஆஸம் என்பதற்கான இன்னொரு வெர்ஷன்தான் படத்தின் டைட்டில். தூத்துக்குடி தாதாவாய் துவம்சம் பண்ணி ஆட்டோ ஓட்டுநராக வந்து ரெட்டை வேடம் காட்டினாலும் ஹீரோயின் என்னமோ ஒருவர்தான். டைட்டில் சொல்லுங்க டியூட்...

2. படத்தின் டைட்டில்தான் பாஸ் அப்படி. ஆனால் இரண்டாக வந்தாலும் ரெண்டுமே ஹீரோதான். மாற்றுத்திறனாளியாய் வந்து நடிப்பில் மாற்றம் காண்பித்து கைத்தட்டல் வாங்கிய கில்லாடி. முறைக்காமச் சொல்லுங்க பதிலை...

3. வட்டிக்கடையில் புழங்கும் வார்த்தைக்கு முலாம் பூசாமல் வந்தார் அஜித். அப்பா, மகனாக வந்து டான் உலகைக் கலக்கியவரை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா துஷ்யந்தா... படம் பெயர் என்னவோ?

4. காணாமல் போன கிராமத்தை வைத்து இன்னமும் மீம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். செக்கச்செவேல் அஜித் கறுப்பாகி நடித்தார். படத்தில் ரெட்டை கதாபாத்திரம்தான். ஆனாலும், ஒரு அஜித் போடுவாரே பல வேஷங்கள். டக்குனு சொல்லுங்க பதிலை...

5. தான் சிறந்த நடிகர் என்பதைத் தெளிவாக நிரூபித்த படம். பப்புள்கம் மென்றுகொண்டே அஜித் காட்டிய வில்லத்தனத்தை ரசித்துக்கொண்டே வெறுத்தார்கள் தமிழ்நாட்டு மக்கள். பலத்தில் பாதி பெறுபவனின் படம் பெயர் சொல்லுங்க பாஸ்?

6. ரீமேக் என்றாலும் மேக்கிங்கில் காட்டியது மிரட்டல். அப்பாவியாகவும் அதிரடியாகவும் தல ஹிஸ்ட்ரியில், மிஸ்ட்ரி காட்டிய படத்தின் பெயர் என்னவோ?

- கே.கணேஷ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick