தேவதையின் மறுபெயர் சோபியா!

``சோபியாதான் எங்க வீட்டுல மூத்தப் பொண்ணு. அவ பொறந்தப்போ அவ்வளவு சந்தோஷம் எங்க குடும்பத்துல. எல்லோருக்கும் சோபின்னா ரொம்ப இஷ்டம். கைக்குழந்தையா இருக்கிறப்போ, வீட்டுக்குப் பக்கத்துல ஒரு திருவிழா. அங்கே நடந்த வாண வேடிக்கையைப் பார்த்து, கூட இருந்த சொந்தக்காரக் குழந்தைகள் எல்லாம் பயத்துல கத்த ஆரம்பிச்சுட்டாங்க. ஆனா, சோபியாகிட்ட எந்த ரியாக்‌ஷனும் இல்லை. `சரி ஏதும் உடம்பு சரி இல்லாம இருக்குமோ'ன்னு விட்டுட்டோம். முதல் பொறந்தநாள் அப்போ இவளைக் கூப்பிடும்போது எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. அதுக்குப்பிறகுதான் எங்களுக்குத் தெரிஞ்சது, இவளால கேட்க முடியாதுனு. சோபியாவுக்கு ரெண்டு வயசாகும்போது இரண்டாவது பையன் ரிச்சர்டு பொறந்தான். அவனுக்கும் அதே பிரச்னை. ஒரு பக்க காதில் கேட்கும் திறன் இருக்காது. இடது பக்க காது மட்டும் கேட்கும் தன்மை இருந்துச்சு. நாங்க மனசை தளர விடாம நிறைய டாக்டர்ஸைப் பார்த்தோம். ஆபரேஷன் பண்ணினாலும் சக்ஸஸ் ஆகுமான்னு தெரியலை. அதனால ரெண்டு வயசுலேயே `லிப் ரீடிங்' ஸ்கூல்ல சேர்த்துவிட்டோம். அதுக்கு நல்ல பலன் கிடைச்சது!'' -  அம்மா சொல்லச் சொல்ல, அதை மெல்லிய புன்னகையால் ஆமோதிக்கிறார் சோபியா.

சோபியா 2014-ன் `Miss India deaf and dump' ரன்னர். உலக அழகிப்போட்டியின் (deaf and dump) இந்தியா சார்பாகப் பங்கெடுத்தவர். குண்டு எறிதலில் தேசிய அளவில் பங்கெடுத்தவர். கேரளாவில் ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் செவித்திறன் குறைபாடு உள்ள பெண். `லிப் ரீடிங்' மூலம் அம்மாவின் துணையோடு பேட்டி கொடுத்தார் சோபியா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick