பைரவா - விமர்சனம்

பேங்க்ல லோன் வசூல் பண்ணுகிற வசூல் மன்னனான விஜய், நம்ம கீர்த்தி சுரேஷ்கிட்ட காதல் மன்னனாகி, வில்லனுக்கு வில்லாதி வில்லனாகிற கதைதான் பைரவா. கதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு... அதுக்காக  லாஜிக் ஓட்டைகள் மட்டும் ஏன் இம்புட்டு இருக்கு?

`வர்லாம் வர்லாம் வா...'ன்னு சைக்கிள்ல என்ட்ரி கொடுக்கிறதெல்லாம் சிறப்பா.. மிகச்சிறப்பா காட்டிட்டு விஜய்யும் கீர்த்தியும் பைக்ல போற அந்த சீனை எம்.ஜி.ஆர் காலத்து ஸ்டைல்ல கம்யூட்டர் கிராஃபிக்ஸில்  காட்டி இருக்குறதெல்லாம் என்ன கணக்கு பரதன் ப்ரோ? இது 2017 ப்ரோ!

வில்லன்கள் ஒரு சீன்ல செயின்ல கையைக்கட்டி பூட்டுப் போட்டுட்டு போயிடுறாங்க. உடனே யாருக்கும் தெரியாம ஹேர்பின்னை(!) வெச்சு பூட்டைத்தொறந்து எஸ்கேப் ஆகுறாரு விஜய். அவரு பண்ணுறதையெல்லாம் பார்த்தா இவரு பேங்க்லதான் வேலைபாத்தாரா, இல்லை பேங்குக்கு பக்கத்துல பூட்டுக்கடையில ஏதும் வேலை பார்த்தாரான்னு சந்தேகம் வந்துட்டுப்போகுது மக்களே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick