“ரெண்டு வரி ஸ்டேட்டஸ்ல வாழ்க்கை முடிஞ்சிடுதே!”

``எங்க முதல் குறும்படம் `Bus journey'க்கு பாக்யராஜ் சார் அவார்டு கொடுத்தார். ஃபைனல் இயர் படிக்கிறப்போ எடுத்த `குரங்கு' குறும்படத்துக்கு விஜய் அவார்டுல `பெஸ்ட் ஆஃப் 5'-ல ஒண்ணு. `கெக்கே பெக்கே' எங்க டீமோட நாலாவது படம். முதல் மூணும் கொஞ்சம் சீரியஸ் டோன்ல இருக்கும். எங்க குறும்படங்களைப் பார்த்தவங்க நாங்க சீரியஸ் ஆளுங்கனு நினைச்சிட்டாங்க. ஆனா, நாங்க எப்பவுமே ஜாலி மோட்ல சுத்துறவங்க. இந்தக் குறும்படம் பார்த்தா, அது தெரியும். எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினை ஆற்றுறோம்னு நினைச்சு, சோஷியல் மீடியால பொங்கல் வைக்கிறோம். அதிகபட்சம் நாலு நாள். பிறகு வேறொரு விஷயத்துக்குப் போயிடுறோம். ரெண்டு வரி ஸ்டேட்டஸ்ல நம்ம வாழ்க்கையை முடிச்சிடுறோம். அதையெல்லாம் மையமா வெச்சு எடுத்ததுதான், `கெக்கெ பெக்கே' குறும்படம்!'' - சீரியஸ் கொஞ்சம், ஹியூமர் கொஞ்சம் எனக் கலந்துகட்டிப் பேசுகிறார், ராணா. சமீபத்தில் வைரலான `கெக்கெபெக்கே' குறும்படத்தின் இயக்குநர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick