கதை விடுறாங்க!

‘புத்தக சந்தையில் அலைந்துகொண்டிருந்த மனோ, ஓரிடத்தில் ஆச்சர்யப்பட்டு அப்படியே நின்றான். அவன் எதிரில்...’

- இந்த ஒரு வரியை டெவலப் செய்து, டைம்பாஸ் வாசகர்கள் சொன்ன குட்டிக்கதைகள் இதோ...


பாலமுருகன் : பிரபல அரசியல்வாதி எழுதிய ‘30 நாட்களில் கூட்டணி அமைப்பது எப்படி?’,

‘30 நாட்களில் கூட்டணியை உடைப்பது எப்படி?’ என்ற இரு புத்தகங்களும் அடுத்தடுத்து இருந்தன.

போக்கிரி : அவன் எதிரில் விவகாரமான புக் இருந்தது. அதை எப்படி பில் போடுவது என்று விழிபிதுங்க யோசித்துக்கொண்டிருந்தான்.

இம்ரான் இம்மு :
ஒரு திகில் புத்தகத்தைக்கண்டு உறைந்து நின்றான் மனோ. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘அந்த 75 நாட்கள்’.

லீலா பாலாஜி : அவன் எதிரில் இருந்த ஆண்கள் கழிப்பறை வாசலில், அடையாளத்துக்காக மனோவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

ஜெய்லானி பாஷா :
‘ஒரே நாளில் டாக்டர் ஆவது எப்படி?’ என்ற புத்தகத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு நின்றான்.

சண்முக சுந்தரம் :
அவன் எதிரில் ‘அரசியலும் ராஜதந்திரமும்’ எனப் பெயரிடப்பட்ட புத்தகம் இருந்தது. ஸ்டால் வாசலில் வைகோ இரு கைகளை நீட்டி வரவேற்பதுபோல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick