கொக்கிபீடியா - நாஞ்சில் சம்பத்

பெயர்     : நாஞ்சில் சம்பத்

பிறப்பு     : விக்கிபீடியாவிலேயே இல்லை...

வயது     : இதுவும் இல்லை.

இருப்பிடம்    : கன்னியாகுமரி

‘நாஞ்சில்’ சம்பத் என்பவர் ஒரு அரசியல்வாதி ஆவார்.

சாதனைகள் :

‘நாஞ்சில்’ சம்பத் சொல்வதற்கரிய பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். ‘வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்’ எனும் பழமொழிக்கு உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இவர்.  நாற்பது பக்க உரையையும் அசால்டாக மனப்பாடம் செய்து செமத்தியாக ஃபெர்ஃபார்ம் செய்யும் இவர் எப்பேர்பட்ட திறமைசாலி என்பதை அந்த இனோவா கார் மூலமாகவே அறியலாம். சொப்பனசுந்தரி, சல்மான் கான் போன்ற பிரபலங்களுக்குப் பிறகு ஒரு காரால் அடிக்கடி நினைவூட்டப்படும் பிரபலம் இவர் தான். ‘சசிகலா ஆணைகளை நிறைவேற்ற தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்’ என இவர் சொன்னதைக் கேட்ட நெட்டிசன்கள் ‘வேறு ஏதும் புது மாடல் காருக்கும் கணக்குபோட்டு விட்டாரோ?’ என அதிர்ச்சியானார்கள். சிறுவயதில் இவர் ‘ஜெய்ஹிந்த்’ படத்தில் வரும் கவுண்டமணியைவிட சூப்பராக பல்டி அடிப்பாராம். அதுவும் அவரைப்போலவே `தலைகீழாக தான் குதிப்பேன்' என அடம்பிடித்து பல்டி அடிப்பாராம். ‘அம்மாவின் திட்டத்தை எல்லாம் பார்த்து சிலர் பெண்ணாக மாற வேண்டும் என ஆசைப்பட்டேன்’ என கூவுவதிலேயே ஒரு வித்தியாசமாக, அதுவும் செமையாக ஃபீல் பண்ணியும் கூவுவார். ஒருமுறை ‘அம்மா மக்களை சந்திக்கவில்லை என்கின்றனர். மக்களுக்கு குறை இருந்தால் தானே சந்திப்பார்கள்’ எனக் கூறினார். இவ்வாறு முட்டுக்கொடுப்பதில் இவர் வேறு லெவல் என்பதை அறியலாம்.

வேதனைகள் :

‘யானைகள் நடந்தால் எறும்புகள் சாகத்தானே செய்யும், வான்கோழி தோகை விரித்து ஆடினாலும் மயில் ஆகாது, உள்ளூர் பேய், அசலூர் குளம்’ என உவமை, உவமேயங்களை பேச்சில் கலந்துகட்டி அடிக்கடி தேரை இழுத்து தெருவில் விடுவார். ‘அம்மாவின் உரையைக் கேட்க வெயிலில் வெந்து மடியக் கூடத் தயார்’ என வயலன்ட்டாக பேசியவர் பங்குனி வெயில் பல்லை காட்டி அடித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும் சைலன்ட் ஆகிவிட்டார். இவர் வைகோவோடு இருந்தபோது வைகோ சிறைக்குச் சென்றார், ஜெயலலிதாவுடன் இருந்தபோது அவரும் சிறைக்குச் சென்றார். இப்போது இவர் சசிகலாவோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

குழப்பங்கள்
:

ஒருமுறை, நயாகாராவில் குளிப்போம் என சொல்வதற்கு பதிலாக நயன்தாராவில் குளிப்போம் என சிதறடித்தார்.

- ப.சூரியராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick