"நான் இப்போ சிங்கம் ஆகிட்டேன்!''

சூர்யா படம் வந்துவிட்டால் போதும். `சிங்கம்' சூர்யாவாகவே தன்னை மாற்றிக்கொள்வது, வண்டியில் விதவிதமான வசனங்களோடு ஸ்டிக்கர் ஒட்டுவது, போட்டோஷாப்பில் போஸ்டர் அடித்து ஊரையே ரெண்டு பண்ணுவது என சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இவரின் கொலைவெறி அட்ராசிட்டீஸ் லிஸ்ட் பெரு...சு.

பெயர், சாகுல் அமீது. இந்தப் பெயரைச் சொல்லிக்கேட்டால் ஏரியாவில் யாருக்குமே தெரியவில்லை. ஆனால், `இங்கே சிங்கம் வீடு எது?' என்று கேட்டால் சின்னக்குழந்தையிடம் இருந்துகூட வருகிறது பதில். `பேட்டி' என்றதும் வணக்கம் வைத்து பேச ஆரம்பித்தார்...

``சாகுல் எப்படி சிங்கமாக மாறினார்?''

``சூர்யா படம் எது வரப்போகுதுன்னாலும் முன்னாடியே வண்டியில் அதைப் பற்றி எழுத ஆரம்பிச்சிடுவேன். அவரை இமிடேட் பண்ணி, அவர் பண்ணுறதையெல்லாம் பண்ணிட்டுத் திரிவேன். சிங்கம் மீசை மாதிரியே வெச்சுக்கிட்டு திரியிறதால ஊருக்குள்ள `சிங்கம் சிங்கம்'னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சு, இப்போ என்னோட நிஜப் பெயரையே மறந்துட்டேன்.  நானே மறந் தாலும், `சூர்யா படம் வருது அந்த கெட்டப்புக்கு மாறலையா?'னு ஏரியாவாசிகளே கேட்க ஆரம்பிச்சிடு வாங்க. அடுத்து, `சிங்கம் 3' ரிலீஸின் செலிப்ரேஷனுக்காக இதோ இப்பவே ரெடி ஆகிட்டோம்.''

``சூர்யா மேல எப்போ ஆரம்பிச்சது இந்த வெறி?''


``ஆக்ச்சுவலா `வாரணம் ஆயிரம்' படத்துல இருந்துன்னு நினைக்கிறேன். இயல்பாகவே சினிமாவைத்தாண்டி அவரோட பழக்கவழக்கங்கள் ரொம்ப ஈர்த்துச்சு. அவங்களோட ஃபேமிலி செட்டப்பும் ரொம்பவே பிடிச்சுப்போச்சு. ரிஸ்க்லாம் எடுத்து சிக்ஸ் பேக்ஸ் வேற படத்துல வெச்சிட்டு வந்தாரா... நானும் ஒரு பாடி பில்டர்ங்கிறதால அதுல இன்ஸ்ஃபைர் ஆகி விழுந்துட்டேன்.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick